ஒரு முற்றிலுமானது AN ABSOLUTE ஷீரிவ்போர்ட், லூசியானா அமெரிக்கா 63-12-01M அது உங்களுக்கு ஏதோ ஒரு காரியத்தைச் செய்கிறதல்லவா? அது நிச்சயமாகவே செய்கிறது. நாம் இப்பொழுது ஜெபத்தில் தலை வணங்குவோமாக. 2 கர்த்தாவே, இந்த அழகான கீர்த்தனையில் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது போல, நீர் எவ்வளவு மகத்தான வராயிருக்கிறீர், இன்று காலை, நீர் மட்டும் இல்லையென்றால் நாங்கள் என்ன செய்திருப்போம் என்று நாங்கள் நினைக்கிறோம்! அதன்பின்னர் நீர் மிகவும் மகத்தானவராயிருக்கிறீர் என்று நாங்கள் நினைக்கும்போது, உமது அன்பு உம்மை எங்களை மிகவும் கவனத்தில் கொள்ளும்படி கட்டாயப்படுத்தியது, அப்பொழுது என்னுடைய ஆத்துமா அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது உண்மைதான். இப்பொழுது நாங்கள் தொடர்ந்து ஆராதனைக்கு செல்லுகையில், நீர் எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடாகிய, ஜீவ அப்பத்தை நீர் எங்களுக்குப் பிட்டுத் தருவீர் என்றும், நான் ஜெபிக்கிறேன். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 3 சகோதரன் அங்கிரென் இந்தக் கூடாரத்திற்கு தொடர்ந்து வருகிறவர். அவர் டென்னஸியில் உள்ள மெம்பிஸில், அவரும் அவருடைய தாயாரும், அவருடைய மனைவியும் வசிக்கிறார்கள். முழு குடும்பமும் கூடாரத்திற்கு வருகிறார்கள். அவர் பேசுவதை நான் கேட்பது மிகவும் அரிது, ஏனென்றால் அது எப்பொழுதுமே மிகவும் பரபரப்பாக இருக்கும், ஆனால் இந்தக் காலையில் அவர் இந்தப் பாடலைப் பாடுவதைக் கேட்க நான் தீர்மானமாயிருந்தேன். அவருடைய மகிமையிலிருந்து கீழே என்ற பாடலில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றை அவர் பாடுகிறார். அவை எனக்கு மிகவும் விருப்பமான பாடல்கள். இந்தக் காலையில், அவருடைய தகப்பனாரை சந்திக்கும் மகத்தான சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது, முதல் முறையாக நான் அந்தச் சிலாக்கியத்தைப் பெற்றிருந்தேன், ஒரு அருமையான மனிதன். மேலும் மேலும் சகோதரன் அங்கிரென், அவருடைய தகப்பனார், அவருடைய மகன் உயிரோடிருக்கும் வரை ஒருபோதும் போகமாட்டார், மாரிஸ், ஏனெனில் அவைகள் நிச்சயமாக ஒரே மாதிரியாகக் காணப்படுகின்றன. 4 அவருடைய மனைவி, சகோதரன் மாரிஸ் அன்கிரனின் தாயார், தேவனுடைய கிருபையினால் கடந்த பதினைந்து வருடங்களாக ஜீவித்து வருகிறார். அதைக் காண, அவள் நிச்சயமாகவே எனக்கு ஒரு மகத்தான ஊக்கமாக இருந்து வருகிறாள் அவள் அந்த இருண்ட வேளைகளினூடாகக் கடந்து சென்று, அதே சமயத்தில் தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறாள். அது கிறிஸ்தவத்தின் அசலான தன்மையையும், அதை விசுவாசிக்கிறவர்களின் விசுவாசத்தையும் நமக்கு வெளிப்படுத்துகிறது. எனவே, இந்தக் காலையில் அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். 5 நாங்கள் கீழ்தளத்தில் ஒரு திருமணத்தை நடத்தினோம். என்னுடைய இரண்டு பிள்ளைகள் விவாகம் செய்து கொண்டனர், கூடாரத்திலிருந்து வந்த என்னுடைய பிள்ளைகள்; எங்களுடைய குட்டி பில்லி சிம்ப்சனும், அந்தக் குட்டி மியர்ஸ் பெண்ணும், சில காலமாகவே இனிய இருதயங்களாக இருந்து வந்தனர்; சாரோல், ஆம். அவர்கள்...அவர்கள் இங்கே சகோதரன் அன்கிரெனுக்கும், அவர்களுக்கும் உறவினர்கள். எனவே, நாம் அவர்களுக்காக மகிழ்ச்சியடைகிறோம், அவர்கள் தங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டதை நான் காண்கிறேன், விவாகம் செய்து கொண்ட பிறகு, சபையின் அரங்கத்திற்கு திரும்பிச் சென்று, ஆராதனைக்கு செவிகொடுக்க அமர்ந்திருக்கிறார்கள். அந்தப் பிள்ளைகள் என்னுடைய இருதயத்தில் எப்பொழுதுமே ஒரு ஆழமான இடத்தைப் பெற்றுள்ளனர், ஏனென்றால் அவர்கள் வார்த்தைக்கு மிகவும் மதிப்பளிப்பவர்கள். அவர்கள்-அவர்கள் வார்த்தையை நேசிக்கிறார்கள். நான் அவர்களை என்னுடைய பிள்ளைகள் என்று அழைக்கிறதை நான் நினைக்கவில்லை, அவர்கள் மற்ற பிள்ளைகளைக் காட்டிலும் சிறந்தவர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் என்னை நோக்கிப் பார்க்கிறார்கள், நான்- நான் நான் அவர்களுக்காகத் தேவனையே நோக்கிப் பார்க்கிறேன். 6 குட்டி பில்லி விவாகம் செய்துகொள்ள விரும்பினான், அப்பொழுது அவன் இராணுவத்திற்கு செல்ல வேண்டியதாயிருக்கப்போகிறது என்று அவன் பயந்தான். அவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் அதே நிலையில் இருந்தனர். அப்பொழுது அந்தப் பையன்கள் என்னிடம் வந்து, "சகோதரன் பிரான்ஹாம், நாங்கள்- நாங்கள் வேலைக்குச் செல்வதற்கு சோம்பேறிகளாகவோ அல்லது வேறு எவராகவோ இருக்க விரும்பவில்லை, ஆனால் நீங்கள் தேவனிடத்தில் கேட்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்" என்றனர். அவர்களால் முடிந்தால், அவர்கள் இராணுவத்திலிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள் என்ற அடிப்படையை அவர்கள் எனக்குக் கூறினார்கள்; அவர்களால் செய்ய முடிந்த எந்தக் காரியத்திலும் அவர்கள் தேசத்தைப் பாதுகாக்க விரும்பாத காரணத்தினால் அல்ல. ஆனால் காரியம் என்னவெனில், அவர்கள்-அவர்கள் சென்றால், அவர்கள் தவறான மாதிரியான ஜனங்களின் மத்தியில் சென்றுவிடப் போகிறார்கள் (நீங்கள் அதை என்னவென்று அழைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது) பிஎக்ஸ் அல்லது நீங்கள் அதை என்னவென்று அழைக்கிறீர்கள், அதன்பின்னர் அவர்கள் வெளியே வந்து அந்த அரை நிர்வாணப் பெண்கள் நடந்து செல்லும் இடத்தை அடைகிறார்கள். அது ஒரு கிறிஸ்தவ பையனுக்கான இடமல்ல, எனவே தேவன் அவர்களுடைய வேண்டுகோளை அருளினார். 7 இப்பொழுது குட்டி பில்லி இன்று காலை இந்த அருமையான குட்டி சாரோலை மணந்து கொள்ள வருகிறார், எனவே நாங்கள் அவர்களுக்காக மகிழ்ச்சியடைகிறோம். அவர்களுக்காகத் தேவனுடைய இராஜ்ஜியத்தில் மிகச் சிறந்ததாக இருக்க நாங்கள் வாழ்த்துகிறோம். 8 இப்பொழுது இது நமக்கு ஒரு மகத்தான நேரமாக இருந்து வருகிறது. இன்று காலை இங்கு எங்களுக்கு ஒரு அருமையான ஞாயிறு பள்ளி வகுப்பு உள்ளது, நிரம்பியிருந்த ஒரு சபை, எனவே நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். அநேக சமயங்களில், ஊழியக்காரர்களே, ஜனங்கள் வந்து நீங்கள் கூறுவதைக் கேட்கும்படியாக அது-அது எங்களை உற்சாகப்படுத்துகிறது. காரணம், நீங்கள் பாருங்கள், நீங்கள் காலியான இருக்கைகளில் பேச விரும்புகிறதில்லை, ஏனென்றால் அவர்கள்... இங்கே யாராவது ஒருவர் இருந்தாலும் நாம் அதையே பேசுவோம். ஆனால் அதேசமயத்தில், "இந்த ஒன்று அதைத் தவறவிட்டால், மற்றொன்று அதைப் பெற்றுவிடும்" என்று நீங்கள் நினைக்கும்போது, அது நல்லதாக உணருகிறது. நீங்கள் பாருங்கள். அது அதை வித்தியாசப்படுத்தி, அதை மகிமையாக்குகிறது. 9 இப்பொழுது, இப்பொழுது நேர்காணல்களில், இது, நாம் அவைகளை வேகமாகப் பார்க்க முடிந்தால் நலமாயிருக்கும். 10 நான் வெளியே வந்தபோது, நான் சகோதரன் பௌட்லியரை சந்தித்தேன், நான் இங்கிருந்தது முதற்கொண்டு அவரை நான் காணவேயில்லை. நான், "நீங்கள் எங்கேயிருந்தீர்கள்?" என்று கேட்டேன். அவர், "அவர்களுக்காக வான்கோழி உணவு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது" என்றார். எனவே நான் அவரிடம் கொஞ்சம் எடை குறைந்து விட்டேன் என்று கூறிக்கொண்டிருந்தேன். அவர், "நீங்களா?" என்று கேட்டார். நான், "நீங்கள் ஒரு சிறிதளவு கூட மாறவில்லையே" என்றேன். அவர், "நீங்களும் அவ்வாறில்லையே" என்றார். 11 நான், "அது உண்மையாகவே இராஜதந்திரம்" என்றேன். நான், "ஆனால், உங்களுக்குத் தெரியும், நான் எடை குறைந்திருக்கிறேன். நான் நூற்று எழுபதிலிருந்து நூற்று நாற்பத்தைந்துக்கு சென்றுவிட்டேன், எனவே நான் நிச்சயமாக மாறிவிட்டேன்" என்று கூறினேன். என்னுடைய உடைகளும், கூட, எனக்குச் சற்று பெரிதானது. அன்றொரு நாள் யாரோ ஒருவர் எனக்கு ஒன்றை வாங்கித் தந்தார், எனவே நான் அதை இங்கே அணிந்து கொள்ளலாம்; தோள்பட்டைகளில் தொங்கிக் கொள்ளாமலும், இடுப்பு பகுதி மடிந்து போகாமலும் இருந்தது. 12 ஆனால் நான்-நான் இயேசு கிறிஸ்துவுக்காக என்னால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் அதைச் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு இருக்கும்போது. உங்களுடைய அருமையான வருகை! 13 நான் இப்பொழுது அறையில் கூறிக்கொண்டிருந்தேன், மகத்தான பரிசுத்த ஆவியானவர் அங்கே ஒரு பெண்ணின் சரீரத்திலிருந்து ஒரு புற்று நோயை அகற்றுவதை நான் கண்டேன். அவள் அவள் டெக்ஸாஸிலிருந்து வந்துள்ள ஒரு பெண்மணி. ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, ஒரு ஊழியக்காரரின் மனைவி, அதைப் போன்ற அதிக பதட்டமான ஒரு நபரை நான் கண்டதேயில்லை. அவள் அங்கே உட்கார்ந்திருப்பதைக் குறித்து கர்த்தர் எனக்கு ஒரு தரிசனத்தைக் காண்பித்தார், நான் அவளைக் கண்டேன். அவள் நியூயார்க்கிற்கு தொலைபேசியில் அழைத்தாள், அவள் இங்கே நழுவிச் செல்ல விரும்பினாள். அவள் ஐந்து நிமிடங்கள் மாத்திரமே இருந்தாள், அதன்பின்னர் அவளுடைய கணவன் ஒரு சீழ்ப்புண்ணால் அவதியுறுவதைக் கண்டேன், அந்தச் சீழ்ப்புண் ஏற்பட காரணம் என்னவெனில், அவருடைய மனைவியின் மேல் கொண்டிருந்த அக்கறையேயாகும். சர்வவல்லமையுள்ள தேவனே, அங்கே அமர்ந்துள்ள அந்த ஸ்திரீயை அமைதிப்படுத்தும். அவள் உட்கார்ந்து கொண்டு இப்பொழுது என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். எனவே, சகோதரனே, உங்களுடைய சீழ்ப்புண் குணமாகிவிட்டது என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். பார்த்தீர்களா? ஆம், நீங்கள் இப்பொழுது சுகமடைந்து, கர்த்தருடைய ஊழியத்திற்கு திரும்பப் போகிறீர்கள். 14 இப்பொழுது, கர்த்தர் செய்கிற ஒரு காரியத்தை நீங்கள் காணும்போது, உங்களால் உங்களால் அதை நிரப்ப முடியாது. நீங்கள் தொடர்ந்து செல்ல விரும்புகிறீர்கள், தொடர்ந்து சென்று கொண்டேயிருக்க வேண்டும், தொடர்ந்து சென்று கொண்டேயிருக்க வேண்டும், தொடர்ந்து செல்ல வேண்டும். 15 மேலும், இப்பொழுது, நேற்றிரவு எங்களுக்கு ஒரு மகத்தான ஜெப ஆராதனை இருந்தது, அது நல்லது, அது அருமையாயுள்ளது. வியாதியஸ்தர் மேல் கரங்களை வைப்பது, அது ஒரு நல்ல காரியம். சில சமயங்களில் அவ்வளவு மாத்திரமே தேவையாயுள்ளது. அப்படியானால் அங்கே அவர்களுக்குப் பின்னால் அங்கே ஒரு காரியம் உண்டு, அவர்களால்-அவர்களால் அதைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை, நீங்கள் அந்த நபரை அழைத்து, அது என்னவென்று கண்டறிய வேண்டும். பாருங்கள், அவர்களைத் தடை செய்து கொண்டிருக்கிற ஏதோ ஒன்று, வழியில் ஏதோ ஒன்று உள்ளது. ஒரு சிறிய நிழல் அதை அதிரச் செய்து விலக்கிவிடும். 16 இப்பொழுது, ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் அங்கிருந்த அந்தச் சிறு பெண்மணி, அவள் மிகவும் பதட்டமடைந்து, மிகவும் வருத்தமடைந்திருந்தாள். பரிதாபமான சிறு நபர், அவள் தன்னுடைய மூச்சைக் கூட விட முடியவில்லை. அவள் அப்படியே, "பேண்ட், பேண்ட்" என்று தொடர்ந்து செய்துகொண்டிருந்தாள், பாருங்கள். 17 இப்பொழுது, நீங்கள் செய்ய வேண்டிய காரியம், இங்கே ஒரு சிறு உட்புறத்தில் உள்ளது, பாருங்கள், அது அவளுடைய ஆவியைப் பற்றிக் கொள்வது. பார்த்தீர்களா? அப்பொழுது நீங்கள் உங்களுடைய சிந்தையையே அவளுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். பார்த்தீர்களா? நீங்கள் உங்களுடைய சிந்தனையை மாற்றிக் கொள்கிறீர்கள். பார்த்தீர்களா? அப்பொழுது அது அதைச் செய்யும்போது, அப்பொழுது நீங்கள் அவளைக் கிறிஸ்துவின் பேரில் மையப்படுத்தி, அங்கிருந்து அவளால் தொடர்ந்து செல்ல முடியும். ஆனால் அவளுடைய சிந்தனை முறையை நீங்கள் மாற்ற வேண்டும், பாருங்கள். அவள் தானே அதை மாற்றிக்கொள்ள முடியாது. அவள் ஒரு சுழலில் ஓடுகிறாள், நீங்கள் அதை எடுக்க வேண்டும். இப்பொழுது ஒரு சிறு காரியம் உங்களுக்கு அளிக்கிறது...அதை ஆராய முயற்சிக்காதீர்கள், அதைச் செய்யாதீர்கள், அதை அப்படியே விசுவாசித்து, தொடர்ந்து செல்லுங்கள். 18 அந்தத் தாய்மார்களின் கரங்களில் கிடந்த அந்தச் சிறு குழந்தை எப்படி அன்று காலை ஒன்பது மணி முதல் மரித்துப் போய், அந்த இரவிலே அந்தச் சிறிய ஆவி எங்கேயிருந்தது? நீங்கள் அந்த ஆவியைக் கண்டு பிடித்து, அதைத் திரும்பக் கொண்டு வர வேண்டும். அதன்பின்னர் அது திரும்பி வருவதை நீங்கள் காணும்போது, அப்பொழுது நீங்கள் கர்த்தருடைய நாமத்தில் எழும்பி அதை அழைக்கலாம். பாருங்கள், அப்பொழுது அது சம்பவிக்கும். ஆனால் நீங்கள் அதைச் செய்யும் வரையில், நீங்கள் உங்களுடைய சுவாசத்தையே வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள், பாருங்கள். 19 அது ஒன்றுமில்லை-அவ்வளவு இரகசியமான எதுவும் இல்லை. அது தேவனைக் கண்டறிவதாகும், உங்களை வழியிலிருந்து விலக்கிக் கொள்ளுதல், பரிசுத்த ஆவியானவர் அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதை உங்களை உபயோகிக்க அனுமதிக்கிறார். அதுதான். எந்த வரத்தின் முக்கியமான காரியமும், உங்களுடைய சொந்த கருத்துக்களை அகற்றிவிட்டு, கிறிஸ்துவை அனுமதிப்பதேயாகும். அது என்ன கூறினாலும், அது கிறிஸ்துவா அல்லது இல்லையா என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால்...வெறும் ஒரு உணர்ச்சிவசப்படுதல், அதை விட்டுவிடுங்கள். ஆனால் அது ஒரு உணர்ச்சிவசப்படுதலாயிருந்தால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். ஆனால் அது வார்த்தையில் எழுதப்பட்டிருந்தால், அப்பொழுது அது தேவனாயிருக்கிறது. எந்த ஆவியும் உங்களுக்குச் சொல்லுகிற எல்லாவற்றையும் வார்த்தையைக் கொண்டு எப்பொழுதும் நிதானித்தறியுங்கள். வார்த்தை, அந்த வார்த்தையிலிருந்து ஒருபோதும் விலகிச் செல்லாதீர்கள்; நீங்கள் அவ்வாறு செய்தால், நீங்கள் இழக்கப்படுவீர்கள். 20 இப்பொழுது, நாம் மதியம் வரை தங்கியிருந்து, இந்தவிதமாகப் பேசிக்கொண்டிராமல், நாம் வேதாகமத்திற்குத் திருப்பி, இங்கே சில வேதவாக்கியங்களை வாசிப்போம். அதன்பின்னர் நாம்...நான் தேவனுடைய வார்த்தையை நேசிக்கிறேன், நாம் யாவரும் அதை அறிவோம் என்பதை நான் அறிவேன். இப்பொழுது இல்லை... 21 நான் இந்தக் காலையில் பிரசங்கிக்க அல்லது பேசப்போவதாக இருந்தேன், உலகத்தோற்ற முதற்கொண்டே மறைக்கப்பட்ட தேவனுடைய இரகசியங்களின் பேரில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்குக் கற்பிக்கப்போவதாக இருந்தேன், இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்டது. அவை யாவற்றையும் நிறைவேற்ற எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லை. வரப்போகும் கலியாணத்தைக் குறித்து நான் மறந்துவிட்டேன். எனவே அடுத்த முறை வரும்போது நான்-நான் அதைப் பற்றிப் பேசலாம். 22 இப்பொழுது நான் வேதாகமத்தில் மூன்று இடங்களில் சிலவற்றை வாசிக்கப் போகிறேன். முதலாவதாக, நான் பிலிப்பியர் 1-லிருந்து வாசிக்க விரும்புகிறேன். பிலிப்பியர் 1-ம் அதிகாரம், 19-ம் வசனத்தில் துவங்கி, 22-ம் வசனம் முடிய வாசிக்கலாம். அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன். நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். 23 இப்பொழுது ரோமர் புத்தகத்தில் பார்ப்போம். நான் எதைப் பாடப் பொருளாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் என்பதன் பேரில் துவங்க, நாம் ரோமர் 8-ம் அதிகாரத்தில், 35-ம் வசனத்திலிருந்து துவங்க விரும்புகிறோம். கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ் காரியங் களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித் திருக்கிறேன். 24 அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் 30-ம் வசனம்: அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப் பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால், 25 இப்பொழுது இது அதிகமான வேதவாக்கியங்கள், ஒருவிதமாக வேதாகமத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லுதல். ஆனால் நாம் அதை அறிவோம், இவ்வளவு வேதவாக்கியங்கள் வாசிக்கப்பட்டிருந்தால், அங்கே நமக்கு உதவி செய்யப் போகிற ஒன்றை நாம் கண்டறியப் போகிறோம். நான் இந்தக் காலையில் இந்தப் பொருளை முற்றிலுமான என்ற வார்த்தையாக: ஒரு முற்றிலுமானது என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ள விரும்புகிறபடியால், இப்பொழுது தேவன் நமக்கு இப்பொழுது உதவி செய்வாராக. 26 இப்பொழுது நாம், நான் இந்தப் பாடப் பொருளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, நான் அகராதியைப் பார்த்தேன். நான், "என்ன? யாரோ ஒருவர் தொடர்ந்து, 'அது முற்றிலுமான, உண்மை. முற்றிலுமானது, இதுதான் அது' என்று கூறிக்கொண்டேயிருக்கிறாரே' என்று நினைத்தேன். நான், "அந்த வார்த்தை என்ன? முற்றிலுமானது, அது என்ன பொருட்படுத்துகிறது?" என்று நினைத்தேன். அது என்ன பொருட்படுத்துகிறது என்பதை கண்டறிய நான் அகராதிக்குச் சென்றேன். 27 வெப்ஸ்டர், அது "தனக்கே பரிபூரணமானது, அதன் வல்லமையில் எல்லையற்றது, முதன்மையாக முடிவானது" என்று கூறுகிறது. பாருங்கள், "அதன் வல்லமையில் வரம்பற்றது, தனக்குள்ளே பரிபூரணமானது, அது உண்மையாகவே முடிவானது," முற்றிலுமானது என்ற வார்த்தை. 28 நான் இதைக் கூற விரும்புகிறேன், இந்த வார்த்தைகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால் நான் எப்படி செய்வது என்பதில் பயிற்சி பெற்ற மதகுரு அல்ல, ஜனங்களைப் பற்றிக் கொள்ளும்படியான ஒரு கவர்ச்சிகரமான ஏதோ ஒரு காரியத்தைக் கொண்டு வருவதற்கான உளவியல் வழி அல்ல. நான் செய்கிற ஒரே காரியம், கிறிஸ்து எனக்கு அளித்துள்ள நண்பர்களின் நிமித்தமாக, என்னால் முடிந்தளவு சிறந்ததைச் செய்ய முயற்சிப்பதேயாகும், கிறிஸ்துவைக் குறித்த என்னுடைய எண்ணம் என்னவாயிருக்கிறது என்பதை அவர்கள் காண வேண்டும் என்று நான் நான் நான் விரும்புகிறேன். 29 இப்பொழுது, ஒவ்வொரு மகத்தான சாதனையும் முற்றிலுமான ஒன்றோடு பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு முற்றிலுமானதான நிலை இல்லாமல் நீங்கள் வாழ்க்கையை நடத்த முடியாது. அது முற்றிலுமானதாக இல்லாமல் உங்களால் ஒரு சாதனையைச் செய்ய முடியாது, ஏனென்றால் அதுவே முடிவான இணை கம்பமாக உள்ளது. அது-அது பயணத்தின் முடிவிலே தடையாக இருக்கிறது. அது நீங்கள் ஏதோ ஒன்றோடு பிணைக்கப்பட்டிருக்கிற ஒரு ஸ்தலமாய் உள்ளது. 30 நாம் இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த நாளில், ஒவ்வொரு காரியமும் மிகவும் உடையக்கூடியதாகவும், எளிதில் உடையக்கூடியதாயும், அடித்துச் செல்லப்படுகிறதாயிருக்கிறது, இந்தச் செய்தி மிகவும் பொருத்தமான ஒரு காரியமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், விசேஷமாகக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய ஆழமான தண்ணீரினூடாக இப்பொழுது சென்று கொண்டிருக்கையில். கிறிஸ்தவ சபையானது கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் மிக ஆழமான தண்ணீரைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. காரணம், கிறிஸ்தவ மார்க்கத்திற்கு ஏதோ ஒன்று அளிக்கப்பட்டிருக்கிற ஒரு இடத்திற்கு நாம் வந்து கொண்டிருக்கிறோம், அவர்கள் ஏதோ ஒரு காரியத்தின் பேரில் ஒரு தீர்மானம் செய்ய வேண்டியதாயுள்ளது, மேலும் கிறிஸ்தவ சபைக்கு ஏதோ ஒரு காரியம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அவைகள் காற்று, தண்ணீரின் மேல் இலையைப் போல மிதப்பதற்குப் பதிலாக, அவைகள் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிவார்கள். வேதம் கூறியுள்ளபடி, "பலவிதமான போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்" என்று கூறியுள்ளது. காற்று வந்து அந்தச் சிறு இலையை இந்தப் பக்கமாக வீசுகிறது, அதன்பின்னர் மற்றொரு காற்று வருகிறது, வடக்கு காற்று, தெற்கு காற்று, கிழக்கு காற்று, மேற்கு காற்று. நீங்கள் ஒருபோதும் எங்கும் சென்றடையமாட்டீர்கள், நீங்கள் ஸ்திரப்படுத்தப்படமாட்டீர்கள். கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு நிலையான வாழ்க்கையாக இருக்க வேண்டும். அது-அது ஒரு கோட்பாடாய் நீங்கள் பிணைக்கப்பட்டிருக்கிற ஏதோ ஒன்றாய் இருக்க வேண்டும், அது ஜீவனைக் காட்டிலும் மேலானதாயுள்ளது. 31 நீங்கள் ஏதோ ஒரு காரியத்தோடு பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். சிலர் தங்களுடைய வியாபாரத்தோடு பிணைக்கப்பட்டுள்ளனர். சிலர் தங்களுடைய குடும்பங்களோடு பிணைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஒரு கோட்பாட்டோடு பிணைக்கப்பட்டுள்ளனர். சிலர் இராணுவ பதவியுடன் பிணைக்கப்பட்டுள்ளனர். நாம் பல்வேறுபட்ட காரியங்களோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில், சரியென்று நாம் அறிந்துள்ள இடத்தில் நாம் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், பாருங்கள். ஏனென்றால் நீங்கள் உங்களுடைய குடும்பத்தோடு பிணைக்கப்பட்டிருக்கலாம், உங்களுடைய-உங்களுடைய மனைவி உங்களை விட்டுச் செல்லலாம். நீங்கள் இராணுவத்தில் பிணைக்கப்பட்டிருக்கலாம், நீங்கள் கொல்லப்படலாம். நீங்கள் எந்த வித்தியாசமான காரியங்களினாலும் பிணைக்கப்பட்டிருக்கலாம், அதற்கு ஒரு முடிவு உண்டு. ஆனால் ஒரு முடிவான சமன்பாடு இருக்க வேண்டும். எங்காவது அது இருக்க வேண்டும் அந்த- அந்த மனிதன் தன்னுடைய நித்திய பயண இலக்கை இணைக்க வேண்டியதாயுள்ளது. ஏனென்றால் நீங்கள் உங்களுடைய வேலையில் அதை நம்பப் போகிறீர்கள் என்றால், உங்களுடைய வேலை முடிவுறும்போது, அது முடிந்துவிட்டது. உங்களுடைய குடும்பம் எடுக்கப்படும்போது, அது முடிந்துவிடுகிறது. 32 ஆனால் நான் நினைக்கிறேன் ஒரே ஒரு காரியம் மாத்திரமே கடைசி இணைக் கம்பம் என்று நான் நினைக்கிறேன். பவுல் இங்கே தன்னுடைய வாழ்க்கையில் ஒரு இணைக் கம்பத்தை உடையவனாயிருந்தான் என்று நான் நினைக்கிறேன். நாம் அந்தவிதமாக அழைப்போமானால், நான் ஒரு பட்சமாக, அந்தக் இணைக் கம்பத்தின் பேரில் பேச விரும்புகிறேன். அவன், "கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்." என்றான். இப்பொழுது, கிறிஸ்து பவுலின் முற்றிலுமானவராக இருந்தார். அது அவனுடைய இணைக் கம்பமாய் இருந்தது. அது அவனுடைய...அது எல்லா வாதங்களுக்கும் முடிவாயிருந்தது. அது கிறிஸ்துவாயிருந்தது, அது அவனுடைய இணைக் கம்பமாய் இருந்தது. 33 பவுல் எப்பொழுதுமே அந்த இணைக் கம்பத்தை உடையவனாயிருக்கவில்லை. அவன் வழக்கமாகப் பரிசேயர் குழுவோடு கட்டப்பட்டிருந்தான். அவன் பயிற்றுவிக்கப்பட்டு, கல்வி கற்க வேண்டியவனாயிருந்தான், எனவே அவர்கள் அவனை ஏற்றுக்கொண்டு, அவன் தங்களுடைய கம்பத்தில் தன்னை இணைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆனால் ஒரு நாள் அவன் தமஸ்குவிற்கு செல்லும் வழியில் இருந்தபோது, அவன் இயேசுவை முகமுகமாய் சந்தித்தான். அவன் தன்னுடைய பரிசேயரின் இணைக் கம்பத்திலிருந்து அவிழ்த்துவிட்டான்; மீண்டும் தன்னைத்தானே இணைத்துக் கொண்டான், இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, உயிர்த்தெழுந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். பவுல் அந்த நபரைச் சந்தித்த காரணத்தால் அதை அறிந்திருந்தான். அது அவனை அங்கேயே மாற்றிவிட்டது. அது முதற்கொண்டு அவன் அதே விதமாக இருக்கவில்லை. அவன் ஒரு புத்தகத்தை மாத்திரம் சந்திக்கவில்லை, அவன் ஒரு-ஒரு கோட்பாட்டை மாத்திரம் சந்திக்கவில்லை, அவன் இயேசு கிறிஸ்து என்ற நபரைச் சந்தித்தான். "கர்த்தாவே, நீர் யார்?" அவர், "நானே இயேசு" என்றார். 34 அந்த மனமாற்றத்தைக் குறித்து நாம் ஒரு சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்ப்போமாக. பவுல் ஒரு உத்தமமான மனிதன் என்று நான் நினைக்கிறேன். இது ஞாயிறு பள்ளியாயிருக்கிறபடியால், நாங்கள் இதை ஒரு ஞாயிறு பள்ளியைப் போலக் கற்பிக்க விரும்புகிறோம். பவுல் ஒரு ஆழமான, உத்தமமான மனிதனாயிருந்தான் என்று நான் நினைக்கிறேன், மற்ற எவரிடத்திலிருந்தும் அவனைக் குறித்த எந்தக் காரியமும் வித்தியாசமாயிருக்கவில்லை. 35 அந்தத் தீர்க்கதரிசிகள் யாவரும் நம்மைப் போன்ற மனிதர்களே. வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. பரிசுத்த யாக்கோபு 5-ம் அதிகாரத்தில், "எலியா என்பவன் நம்மைப் போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தான்," அவன் தன்னுடைய ஏற்றத் தாழ்வுகளையும், அவனுடைய உள்ளும் புறத்தையும் உடையவனாயிருந்தான், "அவன் மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான்." 36 பவுல் நம்மைப் போன்றே அதேவிதமான ஒரு மனிதனாயிருந்தான். அவன் தன்னுடைய பதட்டமும், அவனுடைய சந்தேகத்தையும் உடையவனாயிருந்தான். அவன் ஒரு நேர்மையான மனிதனாயிருந்தான். அவன் உலகத்திலேயே இருந்த மிகச் சிறந்த மதப் பிரிவுகளில் ஒன்றிற்கு சென்றுகொண்டிருந்தான். அவன் அந்தப் பிரிவினரின் போதகனாகிக்கொண்டிருந்தான்; ஒரு பெரிய போதகரின் கீழ் கற்பிக்கப்பட்டு, கமாலியேல், அவர்கள் அந்நாளில் கொண்டிருந்த மிகப் பெரிய போதகர்களில் ஒருவராயிருந்தான். அவனுடைய பெற்றோர் அதைக் கவனித்து, பவுலின் வாழ்க்கையில் ஏதோ ஒரு காரியம் இருந்ததைக் கண்டு, அவனைப் பள்ளிக்கு அனுப்ப கடினமாக உழைத்தனர், தேவனுடைய பிரமாணங்களையெல்லாம் அவன் போதித்துக் கொள்ளும்படியாக, மேலும், ஒரு ஆழ்ந்த உத்தமத்தோடு, அவன் அதனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்தான். 37 அவன் இந்தவிதமான கீழ்த்தரமான ஜனங்களைக் குறித்தும், எப்படியாய் ஒரு தீர்க்கதரிசி இருந்தார் என்றும், அற்புதங்களை நிகழ்த்தி, வியாதியஸ்தரை சுகப்படுத்த வேண்டியதாயிருந்த, கலிலேயாவில் எழும்பின, அவருடைய குழுவினரால் அழைக்கப்பட்டவர் என்றும் கேள்விப்பட்டிருந்தான். ஆனால் அவன் சார்ந்திருந்த அவனுடைய- அவனுடைய பிரிவினர் இந்த நாசரேயனாகிய இயேசுவை தீர்க்கதரிசி என்ற இந்த மனிதனை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏனென்றால் அவர் தம்மை அவர்களோடு அடையாளங்காட்டவில்லை. எனவே பவுல் அதற்குள் செல்ல முடியவில்லை, ஏனென்றால் அவனுடைய சொந்த குழுவான ஜனங்களே அதில் விசுவாசங்கொள்ளவில்லை. அப்படிப்பட்டதற்கு எதிராக அவர்கள் அவனை எச்சரித்திருந்தனர். 38 பவுல் நேர்மையாயிருந்து, "இந்தக் காரியம் தேவனால் உண்டானதல்ல என்றும், என்னுடைய சபை இது தேவனால் உண்டானதல்ல என்று கூறினாலும், அதன்பின்னர் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம், அதிலிருந்து விடுபடுவதுதான்" என்று எண்ணினான். "அதை வழியிலிருந்து அப்புறப்படுத்துங்கள், ஏனென்றால் அது ஒரு...தடையாக இருக்கும், அது ஒரு வளர்ச்சியாக இருக்கும், அவனுடைய விசுவாசப் பிரிவினருக்கு விரோதமான ஒரு கடும்பகைமை" என்று கூறினான். எனவே அவன் புறப்பட்டுச் சென்று, அவன் அதை அழைக்கும் அல்லது அவனுடைய சபை அதை அழைக்கும் இந்த "கடும்பகைமையை" அவனுடைய அருமையான பரிசேயக் குழுவிலிருந்து விலக்கி வெட்டிவிட வேண்டுமென்று தன்னுடைய இருதயத்தில் நோக்கங்கொண்டிருந்தான். 39 ஒரு நாள் பிரதான ஆசாரியனிடமிருந்து வந்த கடிதங்களைத் தன்னுடைய சட்டைப் பையில் வைத்துக்கொண்டு, அந்த நிலைமையில் இருந்த அந்த ஜனங்கள் எல்லோரையும் கைது செய்ய, பவுலுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த பொறுப்புக்கள் அதுவாகத்தான் இருந்திருக்கும். அவன் தமஸ்கு என்றழைக்கப்பட்ட ஒரு நகரத்திற்கு தன்னுடைய பாதையில் சென்று கொண்டிருந்தான். அவர்கள் எருசலேமில், அவர்களை அமைதிப்படுத்தினர். எனவே அவன்- அவன் ஸ்தேவானைக் கல்லெறிந்திருந்தான், பவுல் அவனைக் கல்லெறிந்தான் என்று சாட்சி பகர்ந்து, அங்கியை வைத்திருந்தான். இப்பொழுது அவன் இங்கே சென்று அதேக் காரியத்தைச் செய்து, இந்தப் பெரிய இடையூறிலிருந்து விடுபடப் போகிறான். 40 ஆனால் ஏறக்குறைய, அது ஏறக்குறைய நண்பகல் வேளையாய், பதினோரு, பன்னிரெண்டு மணியாயிருக்க வேண்டும், அவன் கீழே அடித்துத் தள்ளப்பட்டான். அவன் அதைச் செய்தபோது, அவன் மேலே பார்த்தபோது, அவனுக்கு முன்பாக ஒரு ஒளி நின்று கொண்டிருந்தது. இந்த ஒளியிலிருந்து ஒரு சத்தம் புறப்பட்டு வந்து, "சவுலே, சவுலே," என்றது, ஒரு கேள்வி, "நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?" இப்பொழுது பவுல் அறிந்திருந்தான், இல்லை சரியாகக் கூறினால், சவுல் தன்னுடைய ஜனங்களை அறிந்திருந்தான் அவர்கள் எகிப்திலிருந்து வெளிவந்தது முதற்கொண்டே அதே ஒளியைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர். மேலும்... 41 நீங்கள் எப்போதாவது வேதாகமத்தின் லாம்சா மொழிபெயர்ப்பைப் பார்த்திருக்கிறீர்களா, பண்டைய.. தேவனுடைய பண்டைய எபிரெய அடையாளம் ஒரு முக்கோண ஒளி; ஏறக்குறைய அதைப் போன்ற ஏதோ ஒன்று, அதாவது தேவனுடைய மூன்று தன்மைகள், ஒரே தேவத்துவத்தில் உள்ளன. இந்த முக்கோண ஒளி, மூன்றும் ஒன்றாக, ஒரே தேவனாயிருந்தது, எபிரேயருக்கு, தேவனுடைய, ஒளியின் ஒரு ஒரு அடையாளமாக இருந்தது. 42 அதன்பின்னர் மோசே அவரை முட்செடியில் சந்தித்தபோது, அப்பொழுது அவர், "நான் இருக்கிறேன்" என்றார், அது மாறாமல் உள்ளது, மூன்று; நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனாயிருக்கிறார். மோசே அவரை எரிகிற முட்செடியில் சந்தித்தான். அவர் ஒரு ஒளியாயிருந்தார். அவர் இஸ்ரவேல் புத்திரரை வனாந்திரத்திலிருந்து வழி நடத்தினபோது, அவர் உடன்படிக்கையின் தூதனாயிருந்தார், மோசே அதை விசுவாசத்தினாலே கண்டு, எகிப்தை விட்டுப் பிரிந்து, கிறிஸ்துவினுடைய நிந்தையை எகிப்தின் நிந்தையைப் பார்க்கிலும் பெரிய பொக்கிஷங்களாக எண்ணினான். விசுவாசத்தினாலே, அது அபிஷேகமாகிய, கிறிஸ்து என்று மோசே கண்டான். அபிஷேகம் ஒரு குறிப்பிட்ட மனிதன் மேலும் இருக்கவில்லை, ஆனால் அது ஒரு அக்கினி ஸ்தம்ப ரூபத்தில் இருந்தது. பார்த்தீர்களா? 43 அதன்பின்னர் அதே அபிஷேகம் அவருடைய ஞானஸ்நானத்தில் இறங்கி வந்து, கிறிஸ்துவுக்குள் சென்று, அவருக்குள் வாசம் செய்தது. அது அவர் என்பதை யோவான் அறிந்திருந்தான். அவன், 'அவர்களை எகிப்திலிருந்து வனாந்திரத்துக்கு வழிநடத்தின ஆவியை நீ அவர்மேல் காண்பாய், வனாந்தரத்திலிருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு பிரவேசித்தது, அவர்மீது நீ தேவனிடத்திலிருந்து இந்த முக்கோண வடிவ ஒளி இறங்கி வந்து அவர்மேல் தரித்திருப்பதை நீ காண்பாய், அவர்தான் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்" என்றார். 44 இப்பொழுது பவுல் இன்னும் இதைக் காணும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் அதை உண்மையாக்க, உங்களுக்கு, யூதர்கள் ஒரு விக்கிரகத்திற்கு முன்பாக அல்லது அதைப் போன்ற எந்தக் காரியத்திற்கு முன்பாகவும் பணிந்து கொள்ள மிகவும் தடை செய்யப்பட்டிருந்தனர்! இப்பொழுது அவன் இந்த மகத்தான ஒளியைக் கண்டபோது, அது கர்த்தர் என்பதை அவன் அறிந்து கொண்டான். கர்த்தர் என்றால், "உடைமை, ஆதிக்கம்" என்று பொருள். அவன்-அவன் அது ஆவியாய் இருந்தது என்பதை அறிந்திருந்தபோது, அந்தத் தீவிர பற்று கொண்ட எபிரெயன் அது போன்ற எந்தக் காரியத்தையும் "கர்த்தர்" என்று அழைத்திருக்கமாட்டான். ஆனால் கவனியுங்கள், அதே அக்கினி ஸ்தம்பம் தான் தன்னுடைய ஜனங்களை வழி நடத்தி வந்துள்ளது என்பதை அவன் அறிந்திருந்தான். அதன்பின்னர் அவன் திரும்பி வந்து, "கர்த்தாவே, நீர் யார்? நீர் யார்? நீர் யாராயிருக்கிறீர் என்பதை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். நீர் மோசேயை 'நான் இருக்கிறேன்' என்ற நாமத்தில் சந்தித்தீர்" என்றான். ஆனால் நான் அவர்களுடைய சிந்தனையோடு ஒரு நிமிடம் நிறுத்த உள்ளேன். 45 இயேசு, அவர் பூமியில் இருந்தபோது, அவர் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்ததை அவர்கள் கண்டனர், கவனியுங்கள், அவர், "நான் தேவனிடத்திலிருந்து வந்தேன்" என்று கூறினார், ஆவி, ஒளி, அக்கினி ஸ்தம்பம், "நான் தேவனிடத்திற்குத் திரும்புகிறேன்." அவர் நம்முடைய பாவங்களுக்காக மரிக்கும்படியாக மாம்சமானார். அதன்பின்னர் அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதலுக்குப் பிறகு, அவர் பரமேறுதலுக்குப் பிறகு, நாற்பது நாட்களில் அவர் பரமேறிச் சென்று, ஐம்பதாவது நாளிலே, அவர் ஒரு அக்கினி ஸ்தம்ப ரூபத்தில் ஜனங்கள் மத்தியில் திரும்பி வந்து, அக்கினிமயமான நாவுகளைப் போலத் தம்மைப் பிரித்து, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தார். அதன்பின்னர் அவர்கள் யாவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, ஆவியானவர் அவர்களுக்குத் தந்தருளின வார்த்தையின்படியே, அந்நிய பாஷைகளில் பேசத் துவங்கினர். 46 பாருங்கள், தேவன் தம்மைப் பிரித்துக் கொள்ளுதல்; தேவன் முதலில் ஒரு மகத்தான அக்கினி ஸ்தம்பத்தில்; தேவன் ஒரு மானிட சரீரத்தில் வெளிப்பட்டார்; இப்பொழுது தேவன் தம்முடைய ஜனங்களுக்கு மத்தியில் தம்மைப் பிரித்துக் கொண்டிருக்கிறார். அக்கினி ஸ்தம்பம் பிரிந்து, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அமர்ந்து, அக்கினி ஜூவாலைகளைப் போல, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அக்கினிமயமான நாவுகள், பிளந்த நாவுகள் அமர்ந்திருந்தன. அவர்கள் யாவரும் அதைக் கொண்டு நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்கு அருளின வார்த்தையின்படியே, அந்நியபாஷைகளில் பேசத் தொடங்கினார்கள். 47 இப்பொழுது, நீங்கள் பாருங்கள், நாம் ஒரு பிளவுபட்ட ஜனங்கள் அல்ல, நாம் ஐக்கியத்தில் இருக்க வேண்டும், ஏனென்றால் நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய ஒரு பாகத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறோம். நாம் ஒன்று கூடி வர வேண்டும், அப்பொழுது அக்கினி ஸ்தம்பமானது அதன் பரிபூரணத்தில் முழுமையில் வெளிப்படுகிறது; அவருடைய சபையானது உன்னதங்களில் ஒன்று சேர்ந்திருக்கும்போது, அப்பொழுது தேவனுடைய வல்லமையின் பரிபூரணம் அவருடைய சபையில் உள்ளது. ஆவிக்குரிய வரங்களையும், ஆவிக்குரிய உத்தியோகங்களையும் வகிக்கும் நாம் ஒவ்வொருவரும் ஒன்று சேர்ந்து, அந்த அக்கினி ஸ்தம்பத்தை மீண்டும் கொண்டு வருகிறோம். 48 பவுல் அது கர்த்தரால் உண்டானதை அடையாளம் கண்டுகொண்டான், மேலும் அவன், "கர்த்தாவே, நான் உம்மைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்தால், நீர் யார்?" என்று கேட்டான். 49 அவர், "நானே இயேசு, முள்ளில் உதைப்பது உனக்குக் கடினமாயிருக்கிறது" என்றார். 50 பவுல் எழும்பி, "நேர்த்தெருவு" என்று அழைக்கப்படும் வீதியில் செல்லும்படி கட்டளையிடப்பட்டான். அங்கே அனனியா என்னும் பெயர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி வந்து, ஒரு தரிசனத்தைக் கண்டு, அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். வேத வாக்கியங்களை ஆய்ந்து, அவனுக்குக் காணப்பட்ட இந்த அக்கினி ஸ்தம்பம் என்ன என்பதைக் குறித்து அறிந்துகொள்ளும்படியாக, அவன் மூன்று வருடங்கள் அரேபியாவுக்குச் சென்றான். 51 இப்பொழுது பவுல், அவனுடைய எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும், அதை ஒரு இணைக் கம்பமாக வைத்திருந்தான் என்பதை நாம் கண்டறிகிறோம். அவன் தேவனை முகமுகமாய் சந்தித்திருந்தான், தேவனால் கட்டளையிடப்பட்டிருந்தான். என்னே ஒரு இணைக் கம்பம்! என்ன ஒரு முற்றிலுமான நிலை! அதுவே எல்லா வாதங்களுக்கும் முடிவாயிருந்தது. அதுவே பவுலுக்கு எல்லாவற்றின் முடிவாயிருந்தது. எல்லா சண்டைகளும், எல்லாமே போய்விட்டன. பரிசேயர்கள் என்ன கூறினார்கள், சதுசேயர்கள் என்ன கூறினார்கள் அல்லது வேறு எவரும் என்ன கூறினார்கள் என்பதைப் பற்றி நான் கவலைப்படுகிறதில்லை; வார்த்தையினால் ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனை அவன் சந்தித்தான், அதுவே அதற்குத் தீர்வாக அமைந்தது! அதுவே அவனுடைய எஞ்சியுள்ள ஜீவியமாயிருந்தது. ஏனென்றால் தேவன் வெளிப்பட்டதை அவன் கண்டிருந்தான், மேலும் அது தேவனாயிருந்தது என்று அவர் இருந்த அந்த உருவம் மற்றும் ரூபத்தின் மூலமும், அது என்னவாயிருந்தது என்பதை சரியாக அவனோடு பேசின ஒரு செவி கொடுக்கக்கூடிய சத்தத்தின் மூலமும், வார்த்தையின் மூலம் அவனுக்கு நிரூபிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது, அது ஒரு மகத்தான காரியமாயிருந்தது. அவன் அகிரிப்பாவிற்கு முன்பாக, "நான் அந்தப் பரம தரிசனத்திற்கு கீழ்ப்படியாதவனா யிருக்கவில்லை" என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. அவன் அதில் கட்டப்பட்டிருந்தான். உண்மையான ஏதோ ஒரு காரியம் இருந்தது, அவன் அறிந்திருந்த ஏதோ ஒரு காரியம், அவனிடத்திலிருந்து யாரும் எடுத்துப் போட முடியாத ஏதோ ஒன்று இருந்தது. 52 இப்பொழுது, இன்றைக்கு, நாம் ஒரு கல்வியை மாத்திரமே நம்பிக்கொண்டிருந்தால், அல்லது வேதாகமத்தை விளக்க ஒரு - ஒரு இயந்திர முறையிலான கல்வியைக் கொண்டிருந்தால், அப்படியானால் நாம் அதை ஒருஒரு மனோதத்துவ கருத்திலிருந்தே பெற்றுள்ளோம். ஆனால் எந்த மனிதனும் அதனோடு நேருக்கு நேர் சந்தித்திருந்தாலொழிய, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க, இந்தப் பிரசங்க பீடத்துக்குப் பின்னால் வர அவனுக்கு உரிமை இல்லை. 53 வனாந்தரத்தின் பின்பக்கத்தில் இருந்த, மோசேயைப் போல, அவன் எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும், என்ன நடந்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவனுடைய குழப்பங்களும், தடுமாற்றங்களும் நீங்கின, ஏனென்றால் அவன் தேவனோடு ஒரு புனிதமான நிலத்தில் நின்றான், அதை அவனிடத்திலிருந்து யாரும் எடுத்துப் போட முடியாது. 54 தேவனோடு ஒரு அனுபவத்தைப் பெற்றுள்ள ஒவ்வொரு மனிதனும் அல்லது ஸ்திரீயும், அதே அக்கினி ஸ்தம்பத்தை உங்களுடைய இருதயத்தின் புனிதமான இடத்தில் சந்தித்திருக்கிறீர்கள். பவுல், "வேதபண்டிதன் என்றோ, பிசாசு என்றோ, வேறொன்றுமில்லை," "நிகழ்காலமோ, எதிர்காலமோ இல்லை, மரணம், சுகவீனம், துக்கம், கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற தேவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கமாட்டாது" என்றான். அது ஒரு இணைக் கம்பமாய் உள்ளது. ஏதோ ஒன்று சம்பவித்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். விஞ்ஞானம் எவ்வளவுதான் இதை, அதை அல்லது மற்றதைக் கூறினாலும், நீங்கள் கட்டப்பட்டிருக்கிறீர்கள். நீங்களும் தேவனும் ஒன்றாகிவிட்டீர்கள். அவர் உங்களுக்குள் இருக்கிறார், நீங்கள் அவருக்குள் இருக்கிறீர்கள். "நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை, நான் உங்களுக்குள்ளும், நீங்கள் எனக்குள்ளும் இருக்கிறதை அந்நாளிலே அறிவீர்கள்." நீங்கள் அவரிடத்தில் கட்டப்பட்டிருக்கிறீர்கள். 55 பவுல் கிறிஸ்துவை மையமாகக் கொண் ஒருஒரு வாழ்க்கையை உடையவனாயிருந்தான். அவன் ஒரு காலத்தில் கொண்டிருந்த வாழ்க்கையைக் காட்டிலும் அது ஒரு வித்தியாசமான வாழ்க்கையாய் இருந்தது. அவனுக்கு ஒரு சமயம் கல்வி சம்பந்தமான கருத்து உண்டாயிருந்தது; ஆனால் இப்பொழுது அவன் ஒரு முழுமையான கிறிஸ்துவை மையமாகக் கொண்ட ஜீவியத்தைப் பெற்றிருக்கிறான். அகிரிப்பா எவ்வளவுதான், "பவுலே, உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. நீ உன்னுடைய சிந்தையை இழந்துவிட்டாய். நீ, நீ மிக அதிகமாகப் படித்திருக்கிறாய்" என்று கூற முடிந்தாலும் அது ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவன், "நான் பைத்தியம் அல்ல" என்றான். 56 அதன்பின்னர் அவன் அகிரிப்பாவிடம் சென்று, "நீ என்னை ஒரு கிறிஸ்தவனாயிருக்கும்படி கிட்டத்தட்ட சம்மதிக்கச் செய்துவிட்டாயே" என்று கூறுமளவிற்கு ஒரு வழியை அடைந்தான். 57 அவன், "இந்தக் கட்டுகளைத் தவிர, நீங்கள் மாத்திரம்...என்னைப் போல இருந்தால் நலமாயிருக்கும்" என்றான். 58 பவுல் கொண்டிருந்ததைப் போன்ற ஒரு கிறிஸ்துவை மையமாகக் கொண்ட ஜீவியத்தை நீங்கள் பெறும்போது, அது நீங்கள் சாதாரணமாகச் செய்யாத காரியங்களைச் செய்யத் தூண்டுகிறது. இப்பொழுது பாருங்கள். சாதாரணமாகவே, அந்த மனிதன் எல்லாவற்றிலும் வேத வாக்கியங்களிலும் மற்ற காரியங்களிலும் பயிற்றுவிக்கப் பட்டிருந்தான், சாதாரணமாக அவன் பயிற்றுவிக்கப் பட்ட அந்த வரிசையை அவன் பின்பற்றியிருப்பான். ஆனால் அவன்...கிறிஸ்துவை தன்னுடைய முற்றிலுமானவராக, தன்னுடைய முடிவானவராக ஆக்கினபோது, அப்பொழுது ஒரு வித்தியாசமான ஜீவியம் உண்டானது. அவன் வித்தியாசமாகச் செய்தான். அவன் ஒரு காலத்தில் பயிற்றுவிக்கப்பட்டிருந்ததற்கு, அவன் பைத்தியக் காரத்தனமான காரியங்களைச் செய்தான். அது அதேக் காரியத்தைச் செய்யும். 59 சபையானது அந்தச் சபைகளின் ஆலோசனை சங்கத்திலிருந்து விலகி, திரும்பி வந்து தேவனுடைய வார்த்தையைத் தங்களுடைய முடிவானதாக ஆக்கிக் கொள்ளுமானால், தேவனுடைய வார்த்தையைத் தங்களுடைய இணைக்கப்பட்ட கம்பமாக ஆக்கிக் கொள்ளுமானால், அதுவே அதைச் செய்யும். ஆனால் அவர்கள் மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒரு சாதனையோடு பிணைத்துக் கொண்டிருக்கின்றனர். அது விழ வேண்டியதாயுள்ளது. பாருங்கள், அவர்கள் அதைச் செய்வார்கள் என்று வேதம் கூறியுள்ளது. ஆனால் உலகத்தோற்ற முதல் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு மணவாட்டி இருக்கப் போகிறாள், அது அந்த இணைக்கப்பட்ட கம்பத்தில் கட்டப்படப்போகிறது. 60 ஏதேன் முதற்கொண்டு, நித்தியத்திலிருந்து வெளிப்பட்டு, காலத்திற்குள் வருவதை என்னால் காண முடிகிறது. அது நடந்தபோது, கல்வாரி வரை இரத்தக் கோடு ஒன்று வந்தது; இந்த வரிசையோடு கட்டப்பட்ட கல்வாரியிலிருந்து, இயேசுவானவர் இணைக் கம்பத்திற்குச் செல்கிறார். என்றோ ஒரு நாள் அவர் தமக்குச் சொந்தமானவர் என்று உரிமை கோர வரும்போது, அந்த முடிவோடு கட்டப்பட்டுள்ள ஒவ்வொருவரும் நித்தியத்திற்குள்ளாக எழுப்பப் படுவார்கள். ஏன்? அவர்கள் எல்லா நேரத்திலும் நித்தியத்திலிருந்து வந்துள்ளனர். அவர்கள் நித்தியத்தில் முன்குறிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேவனுடைய பாகமாயிருக்கிறார்கள். அவர்கள் ஆதியிலே அவருடைய சிந்தையில் இருந்தனர். நான் பேசிக்கொண்டிருந்த அந்த அடையாளம், அது பூமியிலிருந்து மேலே வரும்போது, இரத்தத்தின் வரிசையின் அந்தப் பெரிய கயிறு இழுக்கப்படும்போது, அந்த இரத்தத்தில் சேர்க்கப்பட்ட ஒவ்வொருவரும் நித்தியத்திற்குள்ளாக மீண்டும் கொண்டு வரப்படுவார்கள். ஆனால் ஒரே வழி அந்த முற்றிலுமான இயேசு கிறிஸ்துவோடு பிணைக்கப்படுவதாயிருக்கும். அது முற்றிலுமானதே! மனிதனின் சாதனை அல்ல; ஆனால் தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார், அவர் ஒரு முற்றிலுமானவராயிருக்கிறார். அவர் உயிரோடிருக்கிறார் என்று நாங்கள் அறிவோம், ஏனென்றால் அவர் இங்கே அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நம்மோடு இருக்கிறார், அவர் பூமியின் மேலிருந்தபோது செய்த அதேக் காரியத்தையே செய்து கொண்டிருக்கிறார். 61 நான் அந்த முடிவான நிலைக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். அதுவே எல்லா சண்டைகளுக்கும் முடிவு. நான் அதற்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். அதுதான் என்னுடைய வாழ்க்கை. கிறிஸ்து என்னை இரட்சித்தபோது நான் ஒரு பாவியாயிருந்தேன். நான் ஏதோ ஒன்றை சந்தித்தேன். அது எனக்குள்ளாக வந்ததிலிருந்து, அது-அது வித்தியாசமாக இருந்து வருகிறது. நான் அதற்குக் கட்டப்பட்டிருக்கிறேன், நான் இருக்கிற ஒவ்வொரு காரியமும் அங்கே கட்டப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் தேவன் தம்முடைய ஜீவனை பிரித்து, நான் அவருக்குள்ளும், அவர் எனக்குள்ளும் வாழ விட்டுவிடுகிறார், அப்பொழுது நாம் கட்டப்பட்டிருக்கிறோம். நான்... 62 மற்றவர்கள் விசுவாசிக்க விரும்புவது எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லை. தனிநபரைப் பொறுத்தவரை, நீங்கள் அதனுடன் பிணைக்கப்பட்டுள்ளீர்கள். அதுதான் உங்கள் இறுதி இலக்கு. அதுதான்...அதுவே கடைசி வார்த்தை. அவர் வார்த்தையாயிருந்தால், அப்பொழுது இதுவே கடைசி வார்த்தையாக இருக்க வேண்டும். இதுவே இதைத் தீர்க்க வேண்டும். அது என்ன கூறுகிறதோ, அதுதான் அந்தச் சிவப்பு நூல். அதுதான் கிறிஸ்துவாகும். அதற்கு முரணான எந்தக் காரியமும், அதைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. இந்த வார்த்தை என்ன கூறுகிறதோ, அதையே நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம்; ஏனென்றால் நான் கிறிஸ்துவோடு கட்டப்பட்டிருக்கிறேன், கிறிஸ்து வார்த்தையா யிருக்கிறார். இப்பொழுது நீங்கள் இதைப் புரிந்து கொண்டீர்களா? 63 இந்த நாளுக்கான அவருடைய வார்த்தையின் பாகம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது, அவருடைய பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையின் பாகத்தை வெளிப்படுத்த இங்கிருக்கிறார். 64 அது அவருடைய பிறப்பின்போது அங்கே இருந்தது போன்றேயாகும். ஏசாயா 9:6. வேத வாக்கியங்கள் முழுவதிலும், அவரால் உரைக்கப்பட்ட யாவும் நிறைவேறினது. லூக்காவின் புத்தகத்தில் நாம் அதைக் கூறுகிறோம்...நாம் அதைக் காண்கிறோம். அவரே முடிவாயிருந்தார், அவரே-அவரே அவரைக் குறித்த தீர்க்கதரிசனத்தின் முடிவாகவும் கூட இருந்தார். பழைய ஏற்பாட்டில் உள்ள வரலாறு, பாடல்கள், அவரைக் குறித்து பேசிய ஒவ்வொரு காரியத்தையும் அவர் நிறைவேற்றினார், அது அங்கேயே நிறைவேற்றப்பட்டது. அதுவே முடிவான ஒன்றாகிவிட்டது. அதுவே அந்தக் காலத்திற்கான தேவனுடைய வார்த்தையின் கம்பமாக அமைந்தது. 65 இந்தக் காலத்தின் உண்மையான மறுபடியும் பிறந்த ஜனங்கள், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, இந்த வேத வாக்கியத்தின் இணைக்கப்பட்ட கம்பம் இந்தக் கடைசி நாட்களில் நிறைவேற்றப்பட வேண்டியதாயுள்ளது. அவர்கள் முடிவானவர்கள். அது தேவனுடைய முடிவானது, ஏனென்றால் அது அவருடைய வார்த்தை; வார்த்தை கிறிஸ்து, இணைக்கப்பட்ட கம்பம். அதிலிருந்து விலகிச் செல்ல வழியேக் கிடையாது. ஏதோ ஒன்று உங்களைப் பிடித்து வைத்திருக்கிறது. 66 நான் கூறினதுபோல, நீங்கள் வழக்கமாகச் செய்யாத காரியங்களை அது உங்களைச் செய்யத் தூண்டுகிறது. அது பவுலை அவன் வழக்கமாகச் செய்யாத காரியங்களைச் செய்ய வைத்தது. அது மோசேயை சாதாரணமாக அவன் செய்யாத காரியங்களைச் செய்யச் செய்தது. அது ஒவ்வொரு மனிதனையும், ஸ்திரீயையும் சாதாரணமாகச் செய்யாத காரியங்களைச் செய்யச் செய்கிறது. அது நீங்கள் மையப்படுத்தப்பட்ட ஒரு காரியமாய் உள்ளது. அது ஏதோ ஒன்று, அது உங்களுடைய நிலைப்படுத்தியாகும். அதுபோல... 67 அது கப்பலுக்கு நங்கூரமாயுள்ளது. ஒரு புயலின் நேரத்தில், கப்பல் நங்கூரமிடப்பட்டிருக்கிறது. கிறிஸ்து உங்களுடைய முற்றிலுமான வராயிருந்தால், நீங்கள் அவருக்குக் கட்டப் பட்டிருக்கிறீர்கள். தொல்லை நேரத்தில், கப்பலை, நீங்கள் அதை ஆட விடுவீர்களேயானால், அப்பொழுது அது பாறைகளின் மேல் மோதி நொறுங்கும். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் நங்கூரமிடுகின்றனர். அது பாறையின் அஸ்திபாரத்திற்குள் இறுகிப் போய் விடுமளவிற்கு நங்கூரம் இழுக்கிறது. கப்பல் நங்கூரமிடப் பட்டிருக்கிறது. அது கப்பலுக்கான முற்றிலுமானதாயுள்ளது. 68 மறுபடியும் பிறந்த ஒரு கிறிஸ்தவன் கிறிஸ்துவோடு கட்டப்பட்டிருக்கிறான், வேதாகமம் நங்கூரமாயிருக்கிறது. அது நாம் கட்டப்பட்டிருக்கிற காரியமாய் உள்ளது. ஸ்தாபனங்கள் அனுமதிக்கட்டும், பல்வேறு பட்ட காரியத்தை அனுமதிக்கட்டும், விஞ்ஞானம் அனுமதிக்கட்டும், கல்வியாளர்கள் தாங்கள் விரும்புகிற எந்தக் காரியத்தையும் கூறட்டும். அந்த வார்த்தை அதைக் கூறி, அதை வாக்குத்தத்தம் செய்யும் வரை, நாம் அதற்குக் கட்டுப்பட்டிருக்கிறோம். ஏதோ ஒன்று நம்மை அதிலிருந்து நகர அனுமதிக்காது. அது உண்மை. ஒரு உண்மையாகப் பிறந்த கிறிஸ்தவன், அவர்கள் அந்த வார்த்தையோடு தரித்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய வேண்டும் என்றும், அதைச் செய்ய ஒரு வழி என்றும் அது கூறினால், அந்தவிதமாகத்தான் நாம் அதைச் செய்ய வேண்டும். மற்றவர்கள் என்ன கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல, அதைத்தான் தேவன் கூறினார். நாம் அதற்குக் கட்டப்பட்டிருக்கிறோம், ஒரு கிறிஸ்துவை மையமாகக் கொண்ட ஜீவியம். கிறிஸ்து, மீண்டும், அது வட நட்சத்திரத்தைப் போன்றது. 69 உலகம் சுழலுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நட்சத்திரங்கள், உண்மையாகவே, நீங்கள் சாயங்கால நட்சத்திரமாகக் காண்கிற ஒன்றே, விடிவெள்ளி நட்சத்திரமும் கூட. உலகம் அதற்குத் திரும்புகிறது. ஆனால் அது அந்த நட்சத்திரங்களிலிருந்து விலகிச் செல்கிறது, வடக்கு நட்சத்திரத்தைத் தவிர. இப்பொழுது நீங்கள் உங்களுடைய திசைகாட்டியை சாயங்கால நட்சத்திரத்தின் மேல் வைக்க முடியாது, ஏனென்றால் அடுத்த நாள் காலையில், என்ன? நீங்கள் மேற்கில் சாயங்கால நட்சத்திரத்தில் இருக்கிறீர்கள், அடுத்த நாள் காலையில் நீங்கள் கிழக்கில் இருக்கிறீர்கள். பாருங்கள், உங்களால் அதைச் செய்ய முடியாது. ஆனால் உங்களால் அதை வடக்கு நட்சத்திரத்தின் பேரில் அமைக்க முடியும், ஆமென். நீங்கள் வெளியே வருவீர்கள். 70 அதுதான் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கையாயுள்ளது. நீங்கள் இழக்கப்படும் போது, அவர் உங்களுடைய வட நட்சத்திரமாயிருக்கிறார். அப்படியானால், அவர் வட நட்சத்திர மாயிருந்தால், பரிசுத்த ஆவியானவரே உங்களுடைய திசைகாட்டி, அந்தத் திசைகாட்டி வடக்கு நட்சத்திரத்தை மாத்திரமே சுட்டிக் காண்பிக்கும். அது ஒரு கோட்பாட்டையோ அல்லது ஒரு ஸ்தாபனத்தையோ சுட்டிக் காட்டாது. அது ஒரு உணர்ச்சி வசப்படுதலையோ அல்லது அது என்னவாயிருந்தாலும் சுட்டிக்காது. அது வட நட்சத்திரத்தை நிலையாகப் பற்றிக் கொள்ளும். அவர் உங்களுடைய வட நட்சத்திரம். நீங்கள் இழக்கப்படும்போது, நீங்கள் ஸ்தாபனங்களோடும், அதைப் போன்ற காரியங்களோடும் மாறலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் திசைகாட்டி, உங்களை வார்த்தைக்கு நேராகச் சுட்டிக்காட்டி, அதுவே கிறிஸ்துவாயிருந்து, உங்களை நிலையாக்கி வைத்திருக்கிறது. அதனோடு கட்டுங்கள். 71 வடக்கு நட்சத்திரம் இல்லாமற்போனால், எப்படியொரு மனிதன் மூடுபனி நிறைந்த கடலில் தன்னுடைய வழியைக் கண்டடைவான்? தேவனுடைய வார்த்தைக்கு உங்களை வழிநடத்தவும், அதை வெளிப்படுத்தவும், அதை நிரூபிக்கவும் பரிசுத்த ஆவியே இல்லாமற்போனால், இந்த வேளையில் நாம் என்ன செய்வோம்? பரிசுத்த ஆவியானவர் வார்த்தையை மாத்திரமே சுட்டிக் காட்டுகிறார். "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்." வார்த்தையின் பாகமல்ல; ஆனால் ஒவ்வொரு வார்த்தையும், அதில் உள்ள எல்லாமே. "தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்" ஒரு மனிதன் ஜீவிக்கிறான். அவரே உங்களுடைய ஜீவியத்தில் முற்றிலுமானவராயிருக்கிறார், அவரே உங்களுடைய வடக்கு நட்சத்திரமாகவும் கூட இருக்கிறார். 72 சண்டையின் முடிவைத் தீர்க்க நாம் ஏதோ ஒன்றை, மற்றொன்றை உடையவர்களாயிருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். 73 ஒரு ஸ்திரீ என்ன கூறுகிறாள் என்பதன் பேரில் மேஜை நாகரீகம் சார்ந்திருந்த ஒரு நேரம் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவளுடைய பெயர் எமிலி போஸ்ட் என்று நான் நினைக்கிறேன். நான் அதில் தவறாக இருக்கலாம். அது உண்மை என்று நான் நினைக்கிறேன், எமிலி போஸ்ட். எமிலி போஸ்ட், "உன்னுடைய கத்தியை எடுத்து அதனுடன் அந்தப் பீன்ஸை புசியுங்கள்" என்று கூறியிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. ஏன்? அவள் மேஜை நாகரீகத்தை முற்றிலுமாகக் கடைபிடித்தாள். அது உண்மை. அவள், "உங்கள் கைகளினால் அவைகளைப் புசியுங்கள்" என்று கூறினால், நீங்கள் உங்களுடைய கரங்களினால் அவைகளைப் புசிக்கிறீர்கள். ஏன்? இந்தத் தேசம் அவளை மேஜை நாகரீகத்திற்கு முற்றிலுமாக ஆக்கியது. ஆம், ஐயா. 74 ஜெர்மனி ஒரு-ஒரு முற்றிலுமான நிலையைக் கொண்டிருந்த ஒரு நேரம் இருந்தது, அது ஹிட்லர். அது ஒரு முற்றிலுமானதாயிருந்தது. "அதைச் செய்யுங்கள்" என்று ஹிட்லர் கூறியபோது, வேறு எவரும் என்னக் கூறினாலும் எனக்குக் கவலையில்லை, நீங்கள் அதைச் செய்ய வேண்டும். நீங்கள் செய்வதே நல்லது. அவரே கடைசி வார்த்தை. ஹிட்லர் அவ்வாறு இருந்தான். 75 ரோமாபுரி ஒரு முற்றிலுமான நிலையை உடையதாயிருந்தது, அது சர்வாதிகாரியான முசோலினியாயிருந்தது. ஒரு மனிதன் ஒரு நிமிடம் முன்னதாகவே காரை ஓட்டி வந்தான், அப்பொழுது அவன் தன்னுடைய காரில் அவனைச் சுட்டு வெளியே தள்ளிவிட்டான், "நான் ஒரு நிமிடம் முன்னதாகவே வரும்படி கூறவில்லை, சரியான நேரத்தில் இங்கு இருக்க வேண்டும் என்று நான் கூறினேன்" என்றான். ஒரு முற்றிலுமானது! அவன் என்ன கூறினாலும், அவர்கள் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது. அது திரும்ப வேண்டியதாயிருந்தது. அவன் தன்னுடைய வார்த்தையினால் முழு உலகத்தையும் திருப்பச் செய்வேன் என்று அவன் கூறினான். அது தேவனுடைய வார்த்தையினால் திருப்பப்படுகிறது! 76 எகிப்தில் முற்றிலுமான ஒரு நேரம் இருந்தது. அது பார்வோனாயிருந்தது. நான் ஒரு சமயம் அந்த இடங்களைக் காண எகிப்துக்குச் சென்றிருந்தேன். ரோம சக்கரவர்த்தியான, அவர்கள் வீற்றிருந்த சிங்காசனங்களைக் கண்டறிய நீங்கள் இருபது அடி ஆழம் தோண்ட வேண்டும்; நான் ரோமாபுரியிலும், எகிப்திலும் இருந்தபோது. 77 பாருங்கள், அவையாவும் சரித்திரப் புழுதியாக மாறின, ஏனென்றால் அது தவறான விதமான முற்றிலுமானதாயிருந்தது. அது உண்மை. அது தவறு. அது தோல்வியடைந்தது. அது மனிதனால் உண்டாக்கப்பட்ட முற்றிலுமாய் இருந்தது. மனிதனால் உண்டாக்கப்பட்ட முற்றிலுமான ஒவ்வொரு சாதனையும், மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒவ்வொரு சாதனையும் மண்ணாகிப் போக வேண்டும். அவைகள் மண்ணிலே போய்விட வேண்டும். அது தவறான விதமாயுள்ளது, எனவே அது தவறிவிடுகிறது. 78 நம்முடைய தேசத்தைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நாம் தொல்லைக்குள்ளாகும்போது, யாராவது ஒரு காரியத்தைச் செய்யும்போது, அவர்கள் அதை இங்கே ஒரு ஒரு சிறு நகரத்தின் நீதிமன்றத்தில் பரிசோதித்துப் பார்க்கும்போது, ஏதோ ஒரு காவல் நீதிமன்றத்திற்கு, அதன்பின்னர் அது தொடர்ந்து சென்று, முடிவாக உச்ச நீதிமன்றத்திற்கு வருகிறது. இப்பொழுது, உச்ச நீதிமன்றமே தேசத்தின் முற்றிலுமானதாயுள்ளது. அதுவே அதைத் தீர்த்து வைக்கிறது. இப்பொழுது, கனடாவில் உள்ள, நமது நண்பர்கள் கனடாவிலிருந்து ராணியிடம் செல்லலாம். ஆனால் அமெரிக்காவில், அது உச்ச நீதிமன்றமாகும். அதுதான் முற்றிலுமானதாகும். சில சமயங்களில் நாம் அவர்களுடைய தீர்மானங்களை விரும்புகிறதில்லை, ஆனால் நாம் எப்படியும் அதற்குச் செவிகொடுக்க வேண்டியதாயுள்ளது. ஆம், ஐயா. நாம் அதனோடு இணங்கு கிறதில்லை, சில சமயங்களில் அந்தத் தீர்மானத்தை நாம் விரும்புகிறதில்லை, ஆனால் அது இந்தத் தேசத்தின் முற்றிலுமானதாய் உள்ளது. தேசம் அதனோடு பிணைக்கப்பட்டுள்ளது. அது எல்லா வாதங்களுக்கும் முடிவாயுள்ளது. அந்த உச்ச நீதிமன்றம், "நீங்கள் குற்றவாளி" என்று கூறும்போது, நீங்கள் குற்றவாளியாயிருக்கிறீர்கள். நாம் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; நமக்கு இல்லை, நமக்கு ஒரு தேசம் இல்லை. நாம் போன்ற எந்தக் காரியத்தையும் பெற்றிருக்கவில்லையென்றால் என்னவாகும்? நிச்சயமாக. ஒவ்வொரு காரியத்திற்கும் முற்றிலுமான ஒன்று உண்டு. 79 ஒரு பந்து விளையாட்டில் ஒரு முற்றிலுமான ஒன்று உண்டு. அதுதான் நடுவர். சரி. அவர், "அது ஒரு அடிக்காமல் சென்று விட்ட பந்து" என்று கூறினால், அதுதான் அது. நீங்கள் என்ன கூறினாலும், நான் அதைக் கண்ட விதத்திலும், நீங்கள் அதைக் கண்ட விதத்திலும், நான் என்ன நினைக்கிறேன் என்பதையும் குறித்து கவலைப்படாதீர்கள். அவர் கூறினது அதைத்தான். அது ஒரு முற்றிலுமானதாயுள்ளது. அவர், "அடிக்காமல் சென்று விட்ட பந்து" என்று கூறினால், நீங்கள் அதனோடு இணங்க வேண்டும், ஏனென்றால் அந்த விதமாகவே "அடிக்காமல் சென்று விட்ட பந்து" என்று எழுதப்பட்டிருக்கும். நடுவர் இல்லாவிடில், இப்பொழுது யார் சரியாக இருப்பார்? ஒருவர், "அது ஒரு அடிக்காமல் சென்று விட்ட பந்து" என்றார், மற்றொருவர், "அது அடிக்காமல் சென்று விட்ட பந்து அல்ல; அது ஒரு பந்தாயிருந்தது, அது ஒரு..." என்றார், ஏன், உங்களுக்குக் குழப்பம் உண்டாயிருக்கும், அப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அறியாதிருப்பீர்கள். 80 யாரோ ஒருவருடைய வார்த்தை முடிவானதாக இருக்க வேண்டும். ஆமென். நான் இப்பொழுது உண்மையாகவே நன்றாக உணருகிறேன். மகிமை! அல்லேலூயா! முடிவான ஒன்று இருக்க வேண்டும். நான் அதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஓ, இப்பொழுது, யாரோ ஒருவர், "அது பாவம்" அல்லது "அது பாவம் அல்ல" என்று கூற முடியும். நான் அதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் ஒரு முற்றிலுமானதற்காக மகிழ்ச்சியடைகிறேன். வாதிடுதல் இல்லை, வாதிட வேண்டிய அவசியமில்லை. நடுவர், "அடிக்காமல் சென்று விட்ட பந்து" என்றார், அதுதான் அது; "அது ஒரு அடிக்காமல் சென்று விட்ட பந்து" என்று உங்களுடைய சிந்தையில் அதைக் குறித்துக் கொண்டு, தொடர்ந்து செல்லுங்கள். தேவன் எந்தக் காரியத்தையாவது கூறும்போது, அந்த விதமாகத்தான் அது உள்ளது! அதைக் குறித்து வாக்குவாதம் செய்ய வேண்டியதில்லை, அதுதான் அது. அவர் அவ்வாறு கூறினார். அதுவே கிறிஸ்தவனுடைய முற்றிலுமான தாயுள்ளது, அதாவது அவன் ஒரு கிறிஸ்தவ னாயிருந்தால். தேவன், "அதை இந்த விதமாகச் செய்யுங்கள்" என்று கூறினார். அந்த விதமாகத்தான் அது செய்யப்பட வேண்டும், "சரி" என்று வாதிடாமல், "அது..." அதைக் குறித்து ஒன்றுமேயில்லை. தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார், அதுவே இதற்குத் தீர்வாகிறது! அதுவே உண்மையான விசுவாசிக்கு முற்றிலுமானதாயுள்ளது. ஆம். 81 அப்படிப்பட்ட ஒன்று இல்லையென்றால், நாம் எங்கேயிருப்போம்? மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன் அல்லது எது சரியாக இருக்கும்? பாருங்கள், நாம் விரும்புவோம், அந்தக் காரணத்தினால்தான் உங்களுக்குக் உங்களுக்குக் குழப்பம் உண்டாயிருக்கும். அதுதான் காரணம். அவர்கள் அந்த முற்றிலுமான நிலையிலிருந்து விலகிவிட்டனர், அந்தக் காரணத்தினால்தான் அவர்கள் இந்த மற்ற நட்சத்திரங்களோடு வழிதவறிக் கொண்டிருக்கிறார்கள். 82 ஆனால் முற்றிலுமான ஒன்று உண்டு. முற்றிலுமான ஒன்று இருக்க வேண்டும். முற்றிலுமான ஒன்று இருக்க வேண்டும். ஒரு முற்றிலுமான ஒன்று உண்டு. அதுதான் வார்த்தை. மற்றவர்கள் என்ன கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல. ஆம், ஐயா. 83 இப்பொழுது, ஒரு பந்து விளையாட்டில் நமக்கு ஒரு நடுவர் இல்லையென்றால், ஒவ்வொருவரும் ஒருவர் மற்றொருவருடைய முடியை இழுத்துக் கொண்டும், வம்பு செய்து கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருப்பார்கள். பார்த்தீர்களா? அந்தக் காரணத்தினால்தான் நமக்குக் கிறிஸ்தவத்தில் ஒரு முற்றிலுமானது தேவையாயுள்ளது, இந்த முடி இழுப்பையும், வம்புகளையும், சண்டையையும் நிறுத்த வேண்டும். பார்த்தீர்களா? வார்த்தை அதைக் கூறியுள்ளது, அதுவே அதைத் தீர்த்து வைக்கிறது. அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது அதிலிருந்து எடுத்துப் போடவோ வேண்டாம், அது இருக்கிற விதமாகவே அதை விட்டுவிடுங்கள். 84 போக்குவரத்துக்கு முற்றிலுமான ஒரு விளக்கு உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள், அது நிறுத்த விளக்கு, போக்குவரத்து சைகைக் காட்டுதல். ஏதோ ஒரு காலையில் அது இயங்கவில்லையென்றால் என்னவாகும்? ஓ, என்னே! அவைகளில் ஒன்றில் நீங்கள் எப்போதாவது சென்றிருக்கிறீர்களா? நான் சென்றிருக்கிறேன். சந்தேகமே இல்லை, எந்த ஓட்டுநரும் போய்ச் சேர்ந்திருப்பார். அந்த நிறுத்த விளக்கு வேலை செய்யவில்லையென்றால் என்னவாகும்? அப்பொழுது எல்லோரும் வம்பு செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அங்கே காரோட்டிச் செல்கிறார்கள், ஒருவன், "நான் முதலில் இங்கே இருந்தேன்" என்கிறார், மற்றொருவர், "நான் உங்களுக்கு ஒன்றைக் கூறட்டும், நான் வேலைக்குச் செல்ல வேண்டும்!" என்கிறார். ஓ, என்னே! பெண்கள் கைப்பேசிப் புத்தகத்தைச் சுழற்றிக்கொண்டும், புருஷர்கள் கைமுட்டி சண்டையிடுவதும், நீங்கள் ஒரு குழப்பத்தைக் குறித்துப் பேசுகிறீர்கள்! முற்றிலுமான ஒன்று இருக்க வேண்டும், ஏதோ ஒன்று, "இது சரிதான்" என்று கூறுகிறது, அதுதான் இது. அந்த வெளிச்சம், "நிறுத்து" என்று கூறியபோது, அது நிறுத்தப்படுவதைக் குறிக்கிறது. அது, "போ" என்று கூறும்போது, அது போ என்று பொருள்படுகிறது. அது இல்லையென்றால், நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்கள். 85 அது கிறிஸ்தவ வாழ்க்கையிலும் அவ்விதமாகவே உள்ளது. ஒரு நிறுத்தும் இடம் உண்டு, ஒரு போகும் இடம் உண்டு. தேவனுடைய வார்த்தையே முற்றிலுமானதாயுள்ளது. அதுதான் கிறிஸ்து. ஆம், ஐயா. நீங்கள்... 86 போக்குவரத்து சைகைக் காட்டிகள் இயக்கப்படவில்லையென்றால், அப்பொழுது நமக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதைத்தான் நாம் இன்றைக்கு மதசம்பந்தமான ஐங்கோணத்தில் பெற்றுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்; ஒரு வாகன நெரிசல், பாவனை விசுவாசிகள், அவிசுவாசிகள், மற்றும் யாவும் ஒன்று சேர்ந்து நெருக்கிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஏன்? அவர்களுக்கு முற்றிலுமானது கிடையாது. ஒருவர், "சரி, நாங்கள்... நாங்கள் முற்றிலுமானவர்கள்" என்று கூறுகிறார்கள். மற்றொருவர், "நாங்கள் முற்றிலுமானவர்கள்" என்று கூறுகின்றனர். 87 தேவன் முற்றிலுமானவர். அவர்,"என்னுடையதைத் தவிர மற்றெல்லாமே முற்றிலுமான பொய்யாயிருக்கக்கடவது, என்னுடையது சத்தியம்!" என்று கூறினார். எனவே கிறிஸ்தவ மார்க்கத்திற்கு முற்றிலுமான ஒன்று உண்டு. அதுதான் எல்லா வாதங்களுக்கும் முடிவு. வேதம் அவ்வண்ணமாய்க் கூறியுள்ளது, அது அதைச் சரிப்படுத்துகிறது. ஆம், ஐயா. ஒவ்வொரு காரியத்திலும் ஒரு முற்றிலுமானது இருக்க வேண்டும். 88 சிலர் இன்றைக்கு சபைகளைப் போன்றிருக்கிறார்கள், அநேக சபைகள் தங்களுடைய சொந்த முற்றிலுமான முறையைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் நியாயாதிபதிகளின் நாட்களைப் போன்றே, அவரவர் தங்கள் சொந்த காரியங்களை உடையவர்களாயிருந்தனர், ஒவ்வொரு மனிதனும் தான் சரியென்று நினைத்த வழியைச் செய்தான். ஆனால் அது சரியல்ல. பாருங்கள், அப்பொழுது தேவனுடைய வார்த்தையும் தீர்க்கதரிசிகளும் இல்லாதிருந்தது. வார்த்தையே முற்றிலுமானதாயுள்ளது. அவர்கள் தங்களுடைய சொந்த முற்றிலுமானதை உடையவர்களாயிருந்தனர். அவை ஒவ்வொன்றும் சத்தியமும், வழியுமென்று கூறுகின்றன, "நாங்கள் சத்தியமும், வழியுமாய் இருக்கிறோம்." 89 ஆனால் இயேசுவோ, அவரே சத்தியமும், வழியும், "சத்தியமும், வழியும், வெளிச்சமுமாயிருக்கிறார்" என்றார். அது சரியா? பாருங்கள், அப்படியானால், அவர் வார்த்தையாயிருக்கிறார், எனவே முற்றிலுமானவர் உண்டு. ஸ்தாபன முற்றிலுமாக, அதற்கு ஒன்றுமில்லை; அது தவறு, அதை விட்டுவிடுங்கள். 90 இப்பொழுது, மனிதன் தன்னுடைய சொந்த பார்வையில் சரியானதைச் செய்கிறான், ஆனால் அவன் அதைச் செய்யத் தேவன் ஒரு வழியை வைத்திருக்கிறார். பாருங்கள், தேவனும், அவருடைய வார்த்தையும், அவருடைய தீர்க்கதரிசிகளும் காணாமற் போயிருந்தபோது, ஒவ்வொரு மனிதனும் அவன் செய்ய விரும்பினது போலவே செய்தான். 91 அதுதான் இந்நாளிலிருந்து வருகிறது. ஒவ்வொருவரும், "நான்-நான் இதைச் சார்ந்தவன்" என்று கூறுகின்றனர். நீங்கள் ஒரு கிறிஸ்தவரா? "நான் பிரஸ்பிடேரியன்" என்றான். நீங்கள் ஒரு கிறிஸ்தவரா? நான் உங்களைக் கேட்கிறேன். ஒரு பெண், "நான் ஒவ்வொரு இரவும் ஒரு மெழுகுவர்த்தியை எரிக்கிறேன் என்று நான் உங்களுக்குப் புரிய வைக்கிறேன்" என்றாள். மற்றொரு மனிதன் ஜெப வரிசையில் கூறினார், நான் அவர் ஒரு கிறிஸ்தவனா என்று அவரிடம் கேட்டேன், "நான் ஒரு அமெரிக்கன். எவ்வளவு தைரியம்!" என்றான். அதற்கு இதனோடு ஏதாவது சம்பந்தம் உண்டு என்பது போல. பாருங்கள், அவர்கள் ஒரு தேசத்தோடு பிணைக்கப்பட்டுள்ளனர். மற்றொன்று ஒரு ஸ்தாபன கொள்கைகளோடு பிணைக்கப்பட்டுள்ளது. 92 ஆனால் கிறிஸ்தவன் என்றால் "கிறிஸ்துவைப் போன்றவன்" என்று பொருள். வார்த்தையாகிய கிறிஸ்து உங்களுக்குள் இருப்பதே நீங்கள் கிறிஸ்துவைப் போல் இருக்கக்கூடிய ஒரே வழி. அதுதான் முடிவானது. ஆம். நான் மனமாற்றமடைவதற்கு முன்பே இதை நான் கண்டேன், சபை என்னைப் பற்றிப்பிடிப்பதற்கு முன்பே தேவன் என்னைப் பற்றிப்பிடித்திருப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். எனவே நான் அறிந்தபோது... 93 ஒரு அருமையான பாப்டிஸ்டு ஊழியக்காரர், சகோதரன் நெய்லர், அவர் இன்றைக்கு மகிமையில் இருக்கிறார், அவர் இறங்கி வந்து, அவர் என்னுடன் பேசினார். மேலும், ஓ, நான்-நான் தேவனைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருந்தபோது, அநேக ஜனங்கள் என்னிடத்தில் பேசினார்கள். ஏழாம் நாள் ஆசரிப்பு சபை பிரசங்கியாரும், நான் அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்பது போன்று விரும்பினார். ஆனால் நான் ஒரு கிறிஸ்தவராகப் போகிறேன் என்றால், "இப்பொழுது நான் ஒரு ஏழாம் நாள் ஆசரிப்புக்காரர்" என்று என்னால் என்னால் கூற முடியாது என்பதை நான் கண்டேன். இப்பொழுது, அதெல்லாம் சரிதான். "நான் ஒரு பாப்டிஸ்டு." அது சரிதான், பாருங்கள், ஆனால் நான் அதைக் காட்டிலும் சற்று அதிக நிச்சயமுடையவனாய் இருக்க வேண்டியதாயிருந்தது. ஒவ்வொன்றும் தடுமாறிக் கொண்டிருந்ததால், என்னால்என்னால் நம்ப முடியவில்லை. 94 நான், "யாரோ ஒருவர் எங்கோ இருக்கிறார், நீங்கள் எங்கோ, உண்மையான ஏதோ ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்" என்று எண்ணினேன். 95 எனவே எனக்கு முற்றிலுமான ஒன்று தேவையாயிருந்தது, எனவே நான் ஒன்றை, தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டேன். எனவே அவர் வார்த்தையாயிருக்கிறார் என்று நான் வார்த்தையில் வாசித்தேன், பரிசுத்த யோவான் 1. "இந்த முற்றிலுமானதின் பேரில், நான் என்னுடைய சபையைக் கட்டுவேன்." உம்-ஹும். அது உண்மை. எனவே நான் அவருடைய வார்த்தையின்படி அவரை ஏற்றுக்கொண்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 22:19, "எவனாகிலும் இதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால் அல்லது இதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டினால்" என்று கூறியுள்ளது. அதுதான் முற்றிலுமானதாகும். அதுவே எல்லா சண்டைகளுக்கும் முடிவு. இதுவே முற்றிலுமானதாயுள்ளது."அதிலிருந்து எதையாவது யார் எடுத்துப் போட்டாலும், அல்லது அதனோடு எதையாகிலும் கூட்டினால்," தேவன், "நான் ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கை எடுத்துவிடுவேன்" என்று கூறினார், எனவே அது முற்றிலுமாக இருக்க வேண்டும். இயேசு, "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்று கூறினார். அதன்பின்னர் இந்த "ஒவ்வொரு வார்த்தையும்" இருக்க வேண்டும் என்பதை நான் அறிந்து கொண்டேன். "கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும்" என்று கூறப் பட்டுள்ளது. அந்தவிதமாகவே அது எழுதப்பட்டிருக்கிறபடியே வர வேண்டும். 96 அதன்பின்னர் அவர், "நீங்கள் என்னில் நிலைத்திருந்தால்," அவர் வார்த்தையாயிருக்கிறார், "என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருந்தால், நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்." கிறிஸ்தவ மார்க்கம் தேவனுடைய வார்த்தையாயிருந்தால், அப்போது எனக்குத் தெரியும், அவர் வார்த்தையாயிருந்தார், வார்த்தையை ஏற்றுக்கொண்டதன் மூலம், வார்த்தை மூலமாக ஜீவித்தது, அப்பொழுது நான் அறிகிறேன், "நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ," நீங்கள் வார்த்தையில், வார்த்தையின் ஒரு பாகத்தில் இருந்தால், நீங்கள் கேட்கும்படி வார்த்தை கூறுகிறதை மாத்திரமே நீங்கள் கேட்பீர்கள். அப்படியானால் நீங்கள் வாழும் நாளை அறிந்து, அதன்படியே கேளுங்கள். 97 ஆகையால், மீண்டும் பொருளுக்கு, அதாவது...இப்பொழுது இதைத் தனிப்பட்ட முறையில் பேசுகிறேன், ஆனால் நான் கட்டப்பட்டிருக்கிறேன். நான் இயேசு கிறிஸ்துவோடு, அவருடைய வார்த்தையினால் அவருக்கு, பிணைக்கப்பட்டிருக்கிறேன். அவரே என்னுடைய முற்றிலுமானவர். 98 இந்த எல்லா ஸ்தாபனங்களும் மற்ற காரியங்களும் தங்களுடைய முற்றிலுமானதாயிருந்தன என்பதை நான் கண்டேன். ஒவ்வொன்றும், ஒவ்வொன்றும், அவைகள் தங்களுடைய சொந்த முற்றிலுமான முறையைக் கொண்டிருக்கின்றன. 99 கத்தோலிக்கர், அந்தப் போப் ஏதோ ஒரு காரியத்தைக் கூறும்போது, அதுதான். அதுவே கத்தோலிக்க சபையின் முற்றிலுமானதாயுள்ளது. குருவானவர் என்ன கூறுகிறார், பேராயர் என்ன கூறுகிறார், போப் ஆண்டவருக்கு அடுத்தவர் என்ன கூறுகிறார் என்று எனக்குக் கவலையில்லை; போப் அதைக் கூறும்போது, அதுதான் இது. அதுதான் முற்றிலுமானதாகும். அது சரியாக உள்ளது. 100 மெத்தோடிஸ்டு சபையிலும் மற்றும் அநேக ப்ராடெஸ்டெண்டு ஸ்தாபனங்களிலும், பேராயர் என்ன கூறுகிறாரோ, அதுவே முற்றிலுமானதாயுள்ளது. அவ்வளவுதான். கோட்பாடு என்ன கூறுகிறதோ, அதுவே முற்றிலுமானதாயுள்ளது. 101 பெந்தேகோஸ்தேக்களில், பொது கண்காணி என்ன கூறுகிறார் என்றால், இந்த நபரை நீங்கள் ஒரு எழுப்புதலுக்கு அழைக்கலாமா அல்லது வேண்டாமா என்பதே. அதுதான் முற்றிலுமானதாகும். நீங்கள் அவருடைய வார்த்தைகளுக்கு இணங்கவில்லையென்றால், நீங்கள் ஸ்தாபனத்திலிருந்து உதைத்துத் தள்ளப்படுகிறீர்கள். பாருங்கள், வார்த்தை கருதப்படவேயில்லை. பார்த்தீர்களா? நீங்கள் இந்த முற்றிலுமானவற்றைப் பெற்றுக் கொள்கிறீர்கள், ஒவ்வொன்றும் அதன் சொந்த முற்றிலுமாக உடையதாயிருக்கும். 102 ஆனால், உங்களுக்குத் தெரியும், நான் இதை அவமதிக்கும் விதமாகக் கூறவில்லை. நான் அதை உண்மையாகவே கூறுகிறேன். அப்போஸ்தலர் 20:24-ல், "அவைகளில் ஒன்றையுங் குறித்து கவலைப்படேன்" என்று பவுல் கூறினபோது, அதைப் போலவே நானும் உணருகிறேன். "இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்க நான் தீர்மானமாயிருக்கிறேன்." இந்த முற்றிலுமான காரியங்களைக் குறித்து நான் கவலைப்படுகிறதில்லை, அது போப்பாண்ட வராயிருந்தாலும், பேராயராயிருந்தாலும் அல்லது ஒரு பொது கண்காணியானாலும், அல்லது ஒரு ஆலோசனையாளராகவோ அல்லது ஒரு முறைமையாகவோ அல்லது அது என்னவாயிருந்தாலும், இந்தக் காரியங்கள் எதுவுமே என்னை அசைக்கவில்லை. அவர்கள், "சரி, நாங்கள் நாங்கள் ஒத்துழை-மாட்டோம்" என்று கூறினாலும் நான் கவலைப்படவில்லை, அது ஒரு சிறு வித்தியாசத்தையும் உண்டு பண்ணுகிறதில்லை. இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறொன்றையும் அறியாதிருக்க நான் தீர்மானித்திருக்கிறேன், அவருடைய வார்த்தை நமக்கு மத்தியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நான் அதற்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். அதுவே என்னுடைய நங்கூரமாயுள்ளது. நான் அதில் நங்கூரமிட்டுள்ளேன். 103 "நான்..." பவுல், "நான் அவரைப் பாதையில் சந்தித்தது முதற்கொண்டு நான் திரும்பி வந்திருக்கிறேன். நான்...அவர் என்னை நேராக்கினார்" என்றான். 104 என்னே, எப்படியாய் அவர் என்னை நேராக்கினார்! என்ன ஒரு நேர்படுத்துதலை அவர் என்பேரில் செய்ய வேண்டியதாயிருந்தது. ஆனால் அவர் என்னை நேராக்கினது முதற்கொண்டு, நான் அதற்குக் கட்டுப்பட்டேன். வார்த்தை சத்தியமாயிருந்ததையும், அதற்கு முரண்பட்ட ஒவ்வொரு காரியமும் தவறாயிருந்ததையும் நான் கண்டேன். 105 என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர் என்னை இரட்சிப்பதில் ஒரு நோக்கத்தை உடையவராயிருந்தார். அவர் உங்களை இரட்சிப்பதில் ஒரு நோக்கத்தை உடையவராயிருந்தார். அவருடைய சித்தத்தின் மூலம் அவருடைய சித்தத்தைச் செய்ய நான் தீர்மானித்திருக்கிறேன். அவர் அதைச் செய்ததற்கான காரணம், அவர் ஏன் அதைச் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. 106 "இதனோடு ஒன்றும் கூட்டவோ அல்லது அதிலிருந்து எடுக்கவோ வேண்டாம்!" நான் கூறினதுபோல, வெளிப்படுத்தின விசேஷம் 22:19 அதைச் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளது. அவர் நம்முடைய முற்றிலுமானவராயிருப்பாரானால், அது வேறுவிதமாக இருக்க முடியாது. அது வேறுவிதமாக இருக்க வழியே கிடையாது. அவர் முற்றிலுமானவராக, கடைசி வார்த்தையாக இருக்க வேண்டும். 107 நான் இரட்சிக்கப்பட்டபோது, இலட்சக்கணக்கானோர் பாவத்தில் இருந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் என்னை இரட்சிப்பதில் ஒரு நோக்கத்தை உடையவராயிருந்தார். நான் அநேக சமயங்களில் சகோதரர்களுக்கு மத்தியில் விநோதமானவனாயிருக்கிறேன்; முன்குறிக்கப்படுதலில், சர்ப்பத்தின் வித்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானத்தை விசுவாசிக்கிறேன், மற்றும் இவை அனைத்தும் இருப்பதாகத் தெரிகிறது...தரிசனங்களும், கிறிஸ்துவின் வல்லமையும் திரும்பி வருதல், ஸ்தாபனங்களையும் மற்ற காரியங்களையும் கண்டித்தல். நான் விநோதமானவன், ஆனால் என்னை இரட்சிக்க அவர் ஒரு காரணத்தை உடையவராயிருந்தார், அதைச் செய்வதற்காக ஒரு நோக்கத்தை உடையவராயிருந்தார். கோடிக்கணக்கானவர்கள் பாவத்தில் இருந்தபோது அவர் என்னை இரட்சித்தார், ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அவர் என்னை இரட்சித்தார். அங்கே படித்த மனிதர்கள் இருந்தனர், புத்திசாலிகள் இருந்தனர், அங்கே வேத பண்டிதர்கள் இருந்தனர், அங்கே பேராயர்களும், மருத்துவர்களும் இருந்தனர் மற்றும் பலர் களத்தில் இருந்தனர், அவர் என்னை இரட்சித்தபோது, அவர் என்னை ஏதோ ஒரு காரணத்திற்காக இரட்சித்தார். 108 அந்த வார்த்தை முற்றிலுமானதாய் இருப்பதை நான் காண்கிறேன், நான் அதற்குக் கட்டுப்பட்டிருக்கிறேன், இயேசு கிறிஸ்துவையும், சிலுவையில் அறையப்பட்ட அவரையும் தவிர வேறொன்றையும் நான் அறிய மாட்டேன் என்று தீர்மானித்தேன். அதற்கு அவர் ஒரு காரணத்தை உடையவராயிருந்தார், நான் அந்தக் காரணத்தைக் குறித்து உறுதியாகக் கூற தீர்மானித்துள்ளேன். வேறு எவரும் என்ன கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல, நான் அவர்களை ஐக்கியத்திலிருந்து நீக்கவோ அல்லது அவர்களை இழிவு படுத்துகிறதில்லை, ஆனால் நான் எதற்காகக் கட்டப்பட்டிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். அவர் என்னை இந்தவிதமாக விரும்பினார். அவர் என்னை இந்தவிதமாக உடையவராயிருந்தார். ஒரு நோக்கத்திற்காகவே நான் அவ்வாறு உண்டாக்கப்பட்டேன். நான் இந்த எல்லா குணங்களினாலும், மற்றும் இன்னபிற காரியங்களினாலும், மற்றும் இந்த எல்லா கணக்கிலடங்காத காரியங்களினாலும் உண்டாக்கப்பட்டிருக்க வேண்டியதாயிருந்தது, எனவே அவர் அதை என்னிடத்திலிருந்து தோண்டி எடுக்கும்படியாக, அங்கே ஏதோ ஒரு காரியத்தை வைத்தது; அது அவருடைய வார்த்தையாயிருந்தது. நான் கிறிஸ்துவைத் தவிர வேறொன்றையும் அறியமாட்டேன் என்று தீர்மானித்திருக்கிறேன். 109 கிறிஸ்துவின் மரணம் ஒரு முற்றிலுமானதாயிருந்தது. அது ஒரு முற்றிலுமானதாயிருந்தது. மரண பயத்தில் இருந்தவர்களுக்கு அது எல்லா பயத்திற்கும் முடிவாயிருந்தது. ஆகையால் அவருடைய மரணம் ஒரு முற்றிலுமானதாயுள்ளது. 110 ஜனங்கள் மரணத்திற்கு பயப்படுகின்றனர். யோபுவும் கூட மரணத்திற்கு பயந்திருந்தான். ஆனால் அவன் அந்தத் தரிசனத்தைக் கண்டபோது! எல்லாமே போய்விட்டதை அவன் அறிந்திருந்தான்; அவருடைய குடும்பம், அவனுடைய- அவனுடைய பிள்ளைகள். அவனுடைய மனைவியும் கூட அவனுக்கு எதிராகத் திரும்பியிருந்தாள், ஏனென்றால் அவனுடைய-அவனுடைய கொப்புளங்களின் துர்நாற்றம்; அவன் தன்னுடைய வீட்டிற்கு வெளியே ஒரு சாம்பல் குவியலின் மேல் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய தன்னுடைய பருக்களைத் தேய்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய மனைவியோ, "நீ ஏன் தேவனை சபித்து, மரணத்தை அடையக் கூடாது?" என்று கேட்டாள். அவன், "நீ பைத்தியக்காரி பேசுகிறது போல் பேசுகிறாய்" என்றான். பார்த்தீர்களா? 111 எலிகூ அவனிடத்தில் பேசினபோது...இந்நாட்களில் ஒன்றில், எலிகூ, நான் உங்களுக்காக அந்த நாமத்தை விவரித்து, அது கிறிஸ்து என்பதை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். 112 அவன் இந்த நிலைமையை உடையவனாயிருந்தபோது,எல்லாமே அவனுக்கு எதிராகப் போய்விட்டிருந்தபோது, அப்பொழுது அவன் நீதியானவரின் தரிசனத்தைக் கண்டான். அவன் தனக்காகப் பிளவில் நிற்கக்கூடிய ஒரு மனிதனைக் கண்டறிய விரும்பினான்; ஒரு பாவமுள்ள மனிதன் மீதும் பரிசுத்த தேவன் மீதும் தம்முடைய கைகளை வைத்து, வழியில் நின்றார். தேவன் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதை அவன் காணும்படிச் செய்தார். அது அவனுடைய முற்றிலுமானதாயிருந்தது. அவன் எழுந்து தன்னை உலுக்கினான். அல்லேலூயா! 113 ஒரு மனிதன் மரிப்பதைக் குறித்து பயப்படும்போது, எழும்பி, உங்களையே உலுக்கி, வார்த்தைக்குள்ளாக நோக்கிப் பார்த்து, தேவனுடைய தரிசனம் என்னவென்று பாருங்கள். 114 அவன் அந்தத் தரிசனத்தைக் கண்டான், அவன், "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாட்களில் இந்தப் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். நான் என்னையே அதனோடு இணைத்துக் கொண்டிருக்கிறேன்! தோல் புழுக்கள் இந்தச் சரீரத்தை அழித்தாலும், நான் என் மாம்சத்தில் தேவனைக் காண்பேன்: அவரை நானே காண்பேன். நான் அதற்குக் கட்டுப்பட்டிருக்கிறேன்" என்று கூறினான். அவன் அதைக் கண்டான். அது தேவனுடைய வாக்குத்தத்தமாயிருந்தது. 115 அவன் இயற்கையின் விதிகளினூடாக நோக்கிப் பார்த்தான். இயற்கையின் பிரமாணத்தின் தொடர்ச்சியைக் குறித்தும், வார்த்தையின் தொடர்ச்சியைக் குறித்தும், தேவனுடைய கிரியையின் தொடர்ச்சியைக் குறித்தும், நான் உங்களிடம் கூறிக் கொண்டிருந்தபோது, ஒவ்வொரு காரியமும் தொடர்ச்சியாய் உள்ளது. அவன் யோபு 14-ல் கேட்டிருந்தான். அவன், "ஒரு மரத்தில் நம்பிக்கை உண்டு, அது மரித்தாலும், மலரும், அது மரித்துப்போனால்; முதலியன. ஆனால்," என்றான், "மனுஷன் படுத்துக்கிடக்கிறான், ஜீவித்துப் போனபின்பு ஒழிந்துபோகிறான். அவனுடைய பிள்ளைகள் அவனைக் கனம் பண்ண வந்தாலும், அவன் அதை உணரான். ஓ," அதன்பின்னர் அவன், "நீர் என்னைப் பாதாளத்தில் மறைத்து, என்னை மறைத்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்துக் கொள்ளும்!" என்றான். அவன் மரணத்தைக் குறித்து பயந்திருந்தான். 116 ஆனால் அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கண்டபோது, அவன், "என் மீட்பர் உயிரோடிருக்கிறார்!" கவனியுங்கள், அவன் அவரை, "மீட்பர்" என்று அழைத்தான். கவனியுங்கள். "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும், என் தோல் புழுக்கள் இந்தச் சரீரத்தை அழித்த பின்பும், நான் என் மாம்சத்திலிருந்து தேவனைக் காண்பேன்" என்றான். தேவனும் மீட்பரும் ஒன்றாயிருந்தனர், தேவனும் மனிதனும் ஒன்றாயிருந்தனர். "நான் தேவனைக் காண்பேன்; அவரை நானே காண்பேன், என் கண்கள் காணும், அந்நிய கண்கள் அல்ல" என்றான். ஆமென். 117 அந்த மீட்பரைத் தவிர தேவனே வேறுயாருமல்ல, அவரையே என் கண்கள் பார்க்கிறது. அவர் ஒரு முற்றிலுமானவர். அவரே முற்றிலுமானவர். அவர் மரணத்திலிருந்து எல்லா பயங்களையும் எடுத்துப் போடுகிறார். அவர் எல்லா பயங்களையும் எடுத்துப் போடுகிறார். 118 எபிரெயர் 2-ம் அதிகாரம், 14-ம் மற்றும் 15-ம் வசனங்களைக் கவனியுங்கள். அவர் எல்லோருக்காகவும் ஒருவரைப் போல மரிக்கும்படியாக மனித ரூபம் எடுத்தார். அவர் மனித ரூபம் எடுத்தார். இந்த மீட்பர் இறங்கி வந்து மனிதனாக்கப்பட்டார், எனவே அவர் எல்லா மனிதருக்காகவும், ஒரே மனிதனாக மரிக்க முடிந்தது. ஓ, அவர் அதை எப்படி செய்தார்? தேவன் எதற்காக ஒரு மனிதனானார்? மனிதனின் தண்டனையைச் செலுத்துவதற்காக. 119 ஆனால், ஈஸ்டர் காலையில், அவர் மரணம், நரகம், கல்லறையின் திறவுகோலோடு வந்தார். ஆமென். சிலுவையில் மரிக்க முடிந்த தேவனை, கல்லறைகளால் அவரைப் பிடித்து வைக்க முடியவில்லை; எதுவுமே பிடித்து வைக்க முடியாது, நரகத்தினால் அவரைப் பிடித்து வைக்க முடியவில்லை. ஒன்றுமே அவரைப் பிடித்து வைக்க முடியவில்லை. அவர் எழுந்தார். அவர் திறவுகோல்களை உடையவராயிருந்தார். அவர் உயிர்த்தெழுந்தார், ஒரு ஜெயவீரர், ஏனென்றால் அவர் மரணம், நரகம், கல்லறை இரண்டையும் ஜெயித்தார். அவர் பூமியில் இருந்தபோது, அவர் சுகவீனத்தை ஜெயங்கொண்டார். அவர் எல்லாவற்றையும் ஜெயங்கொண்டார். அவர் மூட நம்பிக்கைகளை ஜெயங்கொண்டார். அவர் ஜெயங்கொள்ள வேண்டியிருந்த எல்லாவற்றையும் ஜெயங்கொண்டார். மரணம், நரகம், கல்லறையிலிருந்து வெளியே வந்து, அவருடைய பக்கவாட்டில் திறவுகோல்கள் ஒலிக்கின்றன; உன்னதத்திற்கு ஏறி, மனிதனுக்கு வரங்களை அளித்து, பெந்தெகொஸ்தே நாளில் திரும்பி வந்து, அவைகளை பேதுருவினிடத்தில், சபையினிடத்தில் ஒப்புவித்தார். ஆமென். அவரே நம்முடைய முற்றிலுமானவர். எல்லா மரண பயங்களும்... அவர் பிழைக்கிறபடியால், நாமும் கூடப் பிழைக்கிறோம். 120 ரோமர் 8:1-ல் "நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்." நாம் கண்டறிகிறோம், அது ரோமர் என்று நான் நினைக்கிறேன், நாம் கண்டறிகிறோம். மேலும்- மேலும் அவர் நம்முடைய நீதிமானாகுதலாய் இருக்கிறார். நாம் விசுவாசத்தினால் நீதிமான்களாகும்படிக்கு, தேவன் மூன்றாம் நாளில் அவரை எழுப்பினார், நாம் அதை விசுவாசிக்கிறோம். நம்முடைய விசுவாசத்தினால் நீதிமான்களாக்க அவர் அவரை எழுப்பினார். அப்பொழுது அவர் என்ன செய்தார்? அவர் அவரைத் திருப்பி அனுப்பினார், நீதிமானாக்குகிறவர், ஏனென்றால் நம்முடைய விசுவாசம் அதை விசுவாசிக்கிறது. பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்து, நம்முடைய நீதிமானாக்கப்படுதலுக்காக அதற்குள் வந்தார், ஏனென்றால் நாம் மரணத்திலிருந்து ஜீவனுக்குள்ளாக எழுப்பப்பட்டிருக்கிறோம். இப்பொழுது நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருந்து, கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் வீற்றிருந்து, அவருடைய உயிர்த்தெழுதலின் மூலம் நாம் நீதிமான்களாகப்பட்டிருக்கிறோம். 121 அது இப்பொழுது நமக்குள்ளாக இரட்சிப்பின் அச்சாரத்துடன் அறிந்து கொள்ளும்படியாக, நமக்கு நீதிமானாகுதலை அளிக்கிறது, கிறிஸ்துவின் ஜீவன் நமக்குள் துடிக்கிறது. அப்படியிருக்க நாம் எப்படி வார்த்தையை மறுதலிக்க முடியும்? அதாவது, அவர் நமக்கு இந்த உறுதியை அளிக்கிற...வார்த்தையாயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் அங்கே இருக்கிறார். அது என்ன? அது இன்னமும் அந்த வட நட்சத்திரமாக இருக்கிறது, கிறிஸ்து அந்த வட நட்சத்திரமாக இருக்கிறார். பரிசுத்த ஆவியானவரே அந்த நீதிமானாக்கப்படுதலாய் விசுவாசிக்கு நேராக வடக்கு நட்சத்திரத்திற்கு நேராகச் சுட்டிக்காட்டுகிறார். சரி. 122 பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதுமே வார்த்தையையே சுட்டிக் காண்பிப்பார். அது ஒரு கோட்பாட்டை அல்லது ஸ்தாபனத்தை சுட்டிக்காட்டுமானால், அது பரிசுத்த ஆவியானவர் அல்ல. அவர் அந்த வார்த்தையை உறுதிப்படுத்த மரித்தபோது, அவருடைய வார்த்தையிலிருந்து விலகிச் சுட்டிக்காட்டி, அதை அவரால் செய்ய முடியாது. ஆமென். அவர் தாமே அந்த வார்த்தைக்குள் வரும்படியாக அவர் மரித்தார். அவரே அந்த வார்த்தையை மீண்டும் ஜீவிக்கச் செய்யும் உயிர்ப்பிக்கும் ஜீவனாயிருக்கிறார். அதுவே அவருடைய மரிக்கும் நோக்கமாயிருந்தது, அதாவது அவர் தம்முடைய சபையினூடாகத் தம்மை இன்னமும் வெளிப்படுத்தி, ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு காலத்தினூடாகவும், அது செயல்பட வேண்டியவிதமாகவே சரியாகச் செயல்படுத்துகிறார். 123 அவரே இயங்கும் இயங்கு சக்தியாயிருக்கிறார். சபையின் இயக்கவியல், அது என்ன? அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள் போன்றவர்கள். அவரே அதைக் கிரியை செய்கிற இயங்கு சக்தியாய் இருக்கிறார். அது ஒரு குறிப்பிட்ட இயங்கு சக்தியினால் இயக்கப்படுகின்றதைப் போன்று...அவர், அவர் வாயுவை எரியச் செய்யும் அக்கினியாயிருக்கிறார். அவர் எரியும் அறையில் இருக்கும் அக்கினி, அப்போது எரிவாயு, அந்த எரிப்பு அறையின் மீது வார்த்தை ஊற்றப்படுகிறது, அவரே அவளை அனல் மூட்டுகிறார். அவர் ஒருவரே அதை உறுதிப்படுத்துகிறார். அவர் உயிர்த்தெழுதலின் வல்லமையாயிருக்கிறார். அவர் தேவனா யிருக்கிறார். அவர், அவர் அக்கினியாய், அந்தவிதமாகவே அவர் இருக்கிறார். 124 1 தீமோத்தேயு 3:16, "அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது; தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்." அவர் தேவனாயிருந்தார், பாவிகளுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள வந்தார். ஆம், ஐயா. அவர், தேவன், அவரை மூன்றாம் நாளில் எழுப்பினபோது, நம்முடைய நீதிமானாக்கப்படுதலுக்காக இருந்தது. ஆகையால், உன்னதத்தில் உள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்தில் உயர்த்தப்பட்டு, நம்முடைய... நம்முடைய பலவீனங்களுக்காகப் பரிந்து பேசி, நாம் அவரிடத்தில் அறிக்கை செய்கையில், நமக்காகவே மரிக்கிறோம்; அவருடைய வார்த்தையை நமக்குள்ளாக, வாக்குத்தத்தத்தை மீண்டும் வைப்பார். நம்முடைய விசுவாசம் அந்த வார்த்தையை ஜீவிக்கச் செய்கிறது, ஏனென்றால் கிறிஸ்து வார்த்தைக்கு உயிர்ப்பிப்பவராக நமக்குள் இருக்கிறார். 125 சபையானது எல்லா வாக்குவாதங்களும், சச்சரவுகளும் முற்றுப் பெறுவதைக் காண முடிந்தால் நலமாயிருக்கும்! அது உச்ச நீதிமன்றமாக இருக்கும். அது வட நட்சத்திரம். அல்லேலூயா! அதுவே எல்லா சண்டைகளுக்கும் முடிவு. அதுதான் எல்லா கேள்விகளுக்கும் முடிவு. அதுதான் ஒவ்வொரு காரியத்திற்கும் முடிவாகும், "தேவன் அவ்வண்ணமாய் கூறினார்" அதுவே முற்றிலுமானதாயுள்ளது. உங்களை அதனோடு இணைத்துக் கொள்ளுங்கள். பவுல், "நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், மரண மானாலும், சுகவீனமானாலும், நிர்வாணமானாலும், ஆபத்தானாலும், எதுவுமே அதிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது." நாம் ஒரு முற்றிலுமான நிலையில் கட்டப்பட்டிருக்கிறோம். "கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்" என்றார். அங்கே அதைத் தவிர வேறெதுவும் உடையதாயிருக்கவில்லை. அதுவே முற்றிலுமான தாயுள்ளது. 126 அவர் நம்முடைய முற்றிலுமானவராயிருக்கிறார், ஏனென்றால் நாம் உயிர்த்தெழுதலைப் பற்றிய உறுதியை உடையவர் களாயிருக்கிறோம், ஏனென்றால் அவர் நமக்குள் எழுப்பப் பட்டிருக்கிறார். நாம் எப்படி அறிவோம்? அவர் ஜீவிக்கிறார். அவர் பூமியின் மேலிருந்தபோது, அவர் என்ன செய்தாரோ, அதையே அவர் இங்கேயும் செய்கிறார். அவர் அதே அக்கினி ஸ்தம்பமாயிருக்கிறார், நாம் அங்கு அந்தப் படத்தை வைத்துள்ளோம். அவர் சபையில் அதேவிதமாகவே இருக்கிறார். அவர் இன்றைக்கு இங்கிருக்கிறார், இந்தச் சரீரத்தில் அவர் அன்று செய்தது போலவே சரியாகச் செயல்பட்டு, செயல் புரிகிறார். 127 ஒரு தர்பூசணி கொடியின் ஜீவன் ஒரு பூசணிக்காயில் சேர்க்கப்பட்டால், அது ஒருபோதும் மற்றொரு பூசணிக்காயைத் தராது; அதனால அவ்வாறு தர முடியாது, காரணம் அது ஒரு தர்பூசணிப் பழமாயிருக்கும், ஏனென்றால் அதில் உள்ள ஜீவன் தர்பூசணிப் பழமாய் இருக்கிறது. "என்னுடைய... நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ!" நீங்கள் தர்பூசணிகளைப் பெற்றுக் கொள்வீர்கள். ஆமென். முற்றிலுமான, அது சத்தியம் என்பதை நான் அறிவேன். நான் அதற்குள் என் ஆத்துமாவை இணைத்துள்ளேன், அது சத்தியம் என்பதை நான் அறிவேன். தேவனுடைய வார்த்தை, அவரே நம்முடைய முற்றிலுமானவர். 128 இரண்டாம் தெசலோனிக்கேயர், 2-ம் அதிகாரத்தில் நாம் அதை வாசிக்கிறோம் நாம் அவரைச் சந்திக்க நம்முடைய அன்பார்ந்தவர்களோடு ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம். ஓ, அவருடைய புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும், "ஆமென்!" என்று என் இருதயம் எவ்வளவாய்த் துடிக்கிறது. தேவன், "நமக்குப் பிரியமானவர்களை சந்திக்கும்படி நாம் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம்" என்றார். "ஆமென்" என்று வார்த்தை என் இருதயத்தில் கூறினது, ஏனென்றால் வார்த்தை அங்கே உள்ளது. 129 "கர்த்தாவே, நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உம்முடைய வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன். நான் அவைகளை என்னுடைய விரல்களிலும், என்னுடைய கட்டில் கம்பத்திலும் கட்டுகிறேன். நீர் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறீர். நான் அசைக்கப்படுவதில்லை" என்றான். 130 "ஆம், நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும், நான் பொல்லாப்புக்குப் பயப்படேன், ஏனென்றால் நீரே எனக்கு முற்றிலுமானவர். நான் அங்குச் செல்வேன், அப்பொழுது நீர் என்னை வெளியே இழுத்துக்கொள்வீர். நான் என்னுடைய கப்பலின் ஆழமான தண்ணீருக்குள் செல்கிறேன், நீர்...நீர் என்னுடைய நங்கூரமா யிருக்கிறீர். ஆமென். நீர் அங்கே திரைக்குப் பின்னால் இருக்கிறீர். நீர் ஒருவரே என்னைப் புயலினூடாக வழி நடத்திச் செல்வீர். நான் மரணத்தின் நிழல்களாகிய பள்ளத்தாக்கின் நிழல்களண்டைக்கு வரும்போது, நீர் ஒருவரே, மகிமையில் என்னுடைய நங்கூரமாயிருப்பீர்" என்றான். நான் யோர்தானண்டை வரும்போது, நான் கடக்க வேண்டியிருக்கும்போது, அவரே என்னுடைய முற்றிலுமான வராயிருக்கிறார். நான் மறுபக்கத்தில் உயிர்த்தெழுந்த ஒருவரோடு கட்டப்பட்டிருக்கிறேன், அவர் என்னை ஆபத்தான தண்ணீர்களினூடாக இழுப்பார். "நான் பொல்லாப்புக்குப் பயப்படேன், ஏனென்றால் நீர் என்னோடு இருக்கிறீர்." ஆமென். புயல்கள் சீற்றமடையட்டும், ஜீவன், மரணம், என்னவாயிருந்தாலும்; ஒன்றும் பிரிக்க முடியாது. நான் அந்தக் கம்பத்தில் கட்டப்பட்டிருக்கிறேன். 131 அந்தக் கம்பம் பிடித்திருக்கிறது. அது திரைக்குள்ளாகப் பற்றிக்கொண்டிருக்கிறது. அது நங்கூரமிட்டது. அது அப்பால் தேவனுக்கு எதிராக நங்கூரமிட்டது. அது என் இருதயத்திற்கு எதிராக நங்கூரமிட்டது. பரிசுத்த ஆவியானவரே அந்த வாக்குத்தத்தத்திற்காக என்னைத் தூண்டுகிறார். "நான் இருக்கிறேன்!" "நான் இருப்பேன்," "நான் இருந்தேன்," "நான் என்றோ ஒரு நாள் இருப்பேன்" என்றல்ல. "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்று தேவன் கூறுகிறார். "என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்." 132 மரணம் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், அது என்னை ஒருபோதும் தொல்லைப்படுத்தாது, ஏனெனில் நான் உறுதியாக நம்பியிருக்கிறேன், சுகவீனமும் கூட என்னை எடுத்துக்கொள்ளக்கூடும் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன், அல்லது ஒரு துப்பாக்கியிலிருந்து ஒரு தோட்டா, என்றோ ஒரு நாள் என்னை எடுத்துச் செல்லலாம், அது என்னவாயிருக்கும் என்று எனக்குத் தெரியாது, அது எனக்கு என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? "கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்." ஓ, என்னே! ஏனென்றால், மரணத்தின் நதிக்கரையில் அவர் வீற்றிருக்கிறார் என்பதை நான் அறிந்திருக்கிறேன் என்றும், என்றோ ஒரு நாள் அவர் என்னை அவருடைய பிரசன்னத்திற்குள்ளாக இழுத்துக் கொள்வார். அவருடைய நீதியினால் நீதிமானாக்கப்படுதல், அதாவது நான் சிலுவையில் உள்ள அவருடைய மரணத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறேன், தேவன் நம் மத்தியில் மாம்சமானார்; எங்களுக்குள் இன்னும் மாம்சமாக இருக்கிறது, எங்கள் மாம்சத்தில் இன்னும் ஆவி இருக்கிறது. ஆமென். 133 அவரே என்னுடைய முற்றிலுமானவர். அவரே என்னுடைய எல்லாமுமாயிருக்கிறார். அதற்குப் புறம்பான எந்தக் காரியத்தையும், நான் என்னுடைய கரங்களில் எதையும் கொண்டு வரவில்லை. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைத் தவிர வேறொன்றையும் நான் அறியேன். கிறிஸ்துவையும், சிலுவையில் அறையப்பட்ட அவரையும் தவிர வேறெதையும் கேட்க விரும்பவில்லை. என்னுடைய இருதயம் அவருடைய ஒவ்வொரு வாக்குத்தத்தத்திற்கும் "ஆமென்" என்று கூறுகிறது. ஆகையால்தான் அவருடைய பரிசுத்த ஆவியானவர் ஒரு திசைகாட்டி என்பதை நான் அறிவேன், அது வார்த்தைக்கு என்னை வழிநடத்துகிறது. 134 தரிசனங்களில் ஒன்று கூட வார்த்தையில் சரியாக இருந்ததைத் தவிர வேறெதையும் எனக்குக் கூறியதில்லை. ஓ, சகோதரனே, அங்குதான் நான் என்னுடைய உறுதியைப் பெற்றுக்கொண்டேன். அன்றிரவு அவர் அதைக் குறித்து என்னிடத்தில் கூறினபோது, நான் அந்தத் தரிசனங்களை கவனித்திருக்கிறேன். நான் உங்களுடைய கவனத்தை ஈர்ப்பேன், அந்தத் தரிசனம் வார்த்தைக்கு முரணான ஏதாவது ஒன்றை எப்போதாவது கூறியுள்ளதா? அது ஒருபோதும் தவறாக இருந்ததில்லை. ஏன்? அது தேவன். அது என்னுடைய இணைக் கம்பமாய் உள்ளது. 135 ஒரு நாள் காலை, ஒரு தரிசனத்தில், என்னுடைய அன்பார்ந்தவர்கள் ஆற்றின் கரையில் இருந்ததை நான் கண்டேன். அது அங்குள்ளது. நான் அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கட்டுப் பட்டிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் நான் அங்குச் சந்திக்கச் சென்றாக வேண்டும். ஆம், உண்மையாகவே. 136 அவரே என்னுடைய முற்றிலுமானவர். அவரே என்னுடைய சூரியன். அவரே என் ஜீவன். அவரே என்னுடைய இணைக் கம்பம், என்னுடைய வடக்கு நட்சத்திரம். நான் நினைத்ததெல்லாம் அவரே, அவர்தான் எனக்கு. அவரே என் ஜீவன். 137 ஸ்தாபனங்கள், எனக்கு... உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தவில்லை; நான் அதைச் செய்ய விரும்பவில்லை. ஆனால் வார்த்தையோ இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைப் போன்றது, அது வெட்டப்படாமல் தள்ளிவிட முடியாது, பாருங்கள், குறிப்பாக அது இருளில் வெட்டப்படுகையில். கவனியுங்கள், ஸ்தாபனங்கள் மற்ற நட்சத்திரங்களைப் போல இருக்கின்றன, அவைகள் உலகத்தின் திருப்பத்தோடு அசைந்து செல்கின்றன. அது உண்மை. உலகம் செல்லும் ஒவ்வொரு வழியிலும், அவர்கள் தங்களுடைய பெண்களைப் அவர்களுடைய தலைமுடியைக் கத்தரித்துக் கொள்ளவும், குட்டைக்கால் சட்டைகளை அணியவும் மற்றும் மற்ற ஒவ்வொரு காரியத்தையும் அனுமதிக்கிறார்கள், அது ஹாலிவுட் மற்றும் மற்ற எல்லாவற்றோடும் நிலைமாறுகிறது. ஆனால், ஓ, சகோதரனே, அது இன்னமும் சத்தியமாய் நிலைத்திருக்கிறது, அந்த அசைக்க முடியாத ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை இன்னமும் சத்தியமாய் இருக்கிறது! அது என்னுடைய முற்றிலுமானதாயுள்ளது. அது கூறுவது சத்தியமாயிருக்கிறது. ஸ்தாபனம் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் மாறட்டும். ஒரு பட்டப் பெயரினால், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை இழிவுபடுத்த விரும்புகிறார்கள், அது அவர்களைப் பொறுத்தது. ஆனால், என்னைப் பொறுத்தமட்டில், "நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை." என்னைப் பொறுத்தவரையில், அதுவே அஸ்திபாரமான வார்த்தையாயுள்ளது, அங்கேதான் மூலைக்கல் உள்ளது. நான் எந்த ஸ்தாபனத்தையும் கொண்டு மாற விரும்பவில்லை. 138 நான் என்னுடைய திசைகாட்டியை இங்கே எனக்குள்ளாக வைத்திருக்கிறேன், பரிசுத்த ஆவியானவர், என்னை நேராக முற்றிலுமான நிலைக்குச் சுட்டிக்காட்டுகிறார். "வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை." நான் அதை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன், பரிசுத்த ஆவியானவர் அதை எனக்குச் சுட்டிக் காட்டினார். நான் வேறொன்றையும் அறியாதிருக்க தீர்மானித்திருக்கிறேன். அதுவே என்னுடைய முற்றிலுமானதாயுள்ளது. அது அப்படியே இருக்கட்டும். அந்த விதமாகத்தான் நான் அதை விரும்புகிறேன். ஓ, என்னே! இப்பொழுது, சகோதரனே, சகோதரியே, அவருக்குள் உங்களுடைய முற்றிலுமான நிலையை ஆக்கிக் கொள்ளுங்கள். ஆம், ஐயா. 139 அண்மையில் நான் இங்கே இருந்த இக்கட்டான நேரத்தில், மனைவி, பிள்ளைகள், எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். யாரோ ஒருவர் என்னிடம், "நீங்கள் உங்களுடைய மார்க்கத்தைக் கடைபிடித்தீர்களா?" என்று கேட்டார். 140 அதற்கு நான், "இல்லை, அது என்னைக் காத்துக் கொண்டது" என்றேன். பார்த்தீர்களா? பாருங்கள், என்றோ ஒரு நாள் நான் அவர்களை மீண்டும் காண்பேன் என்பதை அறிந்து கொள்ளும்படியான ஒரு முற்றிலுமான எண்ணத்தை நான் உடையவனாயிருந்தேன். ஆமென். நான் அந்த முற்றிலுமான தன்மையைப் பெற்றிருக்கவில்லையென்றால், என்னால் அதை அடைந்திருக்க முடியாது. நான் கட்டப்பட்டிருந்த, அது என்னில் வித்தியாசத்தை உண்டுபண்ணியது, ஏனென்றால் நான் அவர்களை மீண்டும் காண்பேன் என்று அறிந்திருந்தேன். 141 இப்பொழுது, கிருபையினால், "நான் இருக்கிறேன்" என்று கூறின அவரோடு நான் கட்டப்பட்டிருக்கிறேன், "நான் இருந்தேன்" என்றல்ல. "நான் இருக்கிறேன்," என்றென்றும், என்றென்றும் பிரசன்னமானவர், சர்வ-, எல்லாம் அறிந்தவர், சர்வ-, சர்வவல்லமையுள்ளவர், முடிவற்றவர், அதாவது அவர் "நான் இருந்தேன்" என்றல்ல. "நான் இருக்கிறேன்," அவர் இன்னமும் உயிர்த்தெழுதலாயிருக்கிறார். அவர் இன்னமும் வட நட்சத்திரமாகவே இருக்கிறார். அவர் இன்னமும் எனக்கு எல்லாமுமாயிருக்கிறார். 142 மோசே முற்றிலுமானதை உடையவனாயிருந்தான். அவன் அந்த எரிகிற முட்செடியை சந்தித்தபோது, அது அவனுக்கு முற்றிலுமான ஒன்றாக இருந்தது. யோசுவா-யோசுவா... 143 ஓ, உங்களுக்குத் தெரியும், சில சமயங்களில் நீங்கள் ஒரு முற்றிலுமான ஒன்றை எடுத்துக் கொள்ளும்போது, ஒரு முற்றிலுமான நிலை உங்களை ஒரு நம்ப முடியாத உண்மை நிலைக்கு வழி நடத்தும். அது உண்மை. ஆம். ஒரு நம்ப முடியாத உண்மை என்பது உண்மையான ஒன்று, ஆனால் அது விவரிக்கப்பட முடியாது. அது ஒரு நம்ப முடியாத உண்மையாய் உள்ளது. 144 யோசுவா அங்கே நின்று கொண்டிருந்தபோது, அவன் தேவையுள்ளவனாயிருந்ததைக் கண்டான்! அங்கே சென்று அந்தத் தேசத்தைக் கைப்பற்றும்படி தேவன் அவனுக்குக் கட்டளையிட்டிருந்தார், அவர்கள் எல்லா ஜனங்களையும் அடித்து விரட்டி, இஸ்ரவேலரை தேசத்திற்குள் கொண்டு வந்தான். ஒரு நாள், சேனைகள் விரட்டியடிக்கப்பட்டு, தேசத்திற்குள் சென்றன. மேலும் முதல் காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, அவன் அவர்களை சிறைப் பிடித்து விட்டிருந்தான் என்பதை, அவன் அறிந்திருந்தான். எனவே, அவன் அவ்வாறு செய்தபோது, சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. யோசுவா சிருஷ்டிகராகிய தேவனுடைய வார்த்தைக்கு முற்றிலுமாகப் பிணைக்கப்பட்டிருந்தான். அவன் செய்ய வேண்டிய ஒரு வேலையில் அவன் கட்டப்பட்டிருந்தான். ஆமென். 145 சில நேரங்களில் அதைச் செய்வது இனிமையானதல்ல; நீங்கள் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும், வெட்டவும், துண்டிக்கவும் வேண்டும். ஆனால் அது ஒரு முற்றிலுமானதாயுள்ளது. 146 அவனுக்குத் தேவை இருந்தது. அவன், "சூரியனே, அப்பால், நீ அசையாமல் நில்! சந்திரனே, நீ அங்கேயே இரு!" என்றான். மேலும், இருபத்தி நான்கு மணி நேரமும் அது அப்படியே நின்றது. ஓ, ஒரு ஒரு நம்ப முடியாத உண்மையைக் குறித்து பேசுங்கள்! ஆனால் அவன் ஒரு முற்றிலுமான கட்டளையோடு கட்டப்பட்டிருந்தான். ஆம், உண்மையாகவே தேவன் அவனுக்குக் கட்டளையிட்டிருந்தார். புறா அவர்மேல் வரும்போது, அவன் அதைக் காண்பான் என்று யோவான் நிச்சயமுடையவனாயிருந்தான். 147 பவுலைப் போலத் தமஸ்குவிற்கு செல்லும் வழியில் நான் அந்த அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டபோது, அது தேவனுடைய முற்றிலுமானதாயிருந்தது என்பதை நான் அறிந்து கொண்டேன், ஒரு எழுப்புதல் தேசங்களைத் துடைத்தெறியப் போவதாயிருந்தது. அது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக இருக்கும் என்று நான் அறிந்திருந்தேன், நான் அதை இன்றைக்கும் விசுவாசிக்கிறேன். அது என்னுடைய முற்றிலுமான, அது ஒரு நம்ப முடியாத உண்மையாய் இருந்த போதிலும். நிச்சயமாகவே, அது ஒரு நம்ப முடியாத உண்மையாய் இருந்தது, ஏனென்றால் ஒரு அக்கினி ஸ்தம்பம் அங்கே ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. செய்தித்தாள்கள் அதனுடைய ஒவ்வொரு காரியத்தையும் புகைப்படம் எடுத்தன. 148 அது ஒரு நம்ப முடியாத உண்மையாய் இருந்தது, அன்றொரு நாள், மார்ச் 15-ம் தேதி, அல்லது மே மாதம் 15-ம் தேதி என்று நான் நினைக்கிறேன்...இல்லை, இது கடந்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்னரே, ஐயன்மீர், இது என்ன சமயம்? நாங்கள் அங்குச் செல்வோம் என்று கூறினபோது, "ஏழு தூதர்கள் சந்திப்பார்கள், திரும்பி வரும்போது, ஏழு முத்திரைகளின் புஸ்தகம் திறக்கப்படும்" என்றார். "ஆமென்" என்று கூறின சகோதரன் ஃபிரட் சாத்மன் அங்கே அவருக்கு அருகில் நின்று கொண்டு, ஏன், நான் அவர்களிடத்தில், "தேசத்தை அசைக்கும் ஒரு சத்தம் உண்டாகும்" என்று கூறினேன். அப்பொழுது நான், "அது அங்கிருக்கும். அது கர்த்தர் உரைக்கிறதாவது" என்றேன். அது பீனிக்ஸ் முதற்கொண்டு எல்லா இடங்களிலும் ஒலிநாடாக்களில், ஒலிநாடாக்களில், ஒலிநாடாக்களில் உள்ளது. 'அது கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதாகும். 149 ஒரு நாள், அங்கே நின்றுகொண்டு, ஊமத்தை வகையான முட்செடியை, அல்லது என்னுடைய கால்களிலிருந்து பெருமுள்ளை எடுத்தபோது, அது அவ்வாறு இருந்தது; ஏழு தூதர்கள் வானத்திலிருந்து இறங்கி வந்து, அந்த இடத்தை, மலைச்சரிவில் ஐம்பது அல்லது அறுபது பவுண்டுகள் எடையுள்ள பாறைகள் உருண்டு விழுமளவிற்கு அசைத்தனர். அங்கே ஏழு தூதர்கள் நின்று கொண்டு, நான் திரும்பிச் சென்று இந்தச் செய்திகளைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டனர். "ஒவ்வொருவராகச் சந்தித்து, என்ன நடந்ததென்று சொல்லுவார்கள்" என்றனர். அது சரியாக அந்தவிதமாகவே செய்தது. அவர்கள் உயரத்திற்கு ஏறிச்சென்றபோது, இந்த விதமாக ஆகாயத்தில் முப்பது மைல் உயரம் சென்றனர்; அதே நாளில், அவர்கள் அதைப் புகைப்படமாக எடுத்தனர், விஞ்ஞானம் அதை எடுத்தது, உலகம் முழுவதும் சென்றது. அது ஒரு நம்ப முடியாத உண்மையாய் உள்ளது, ஆனால் அது ஒரு முற்றிலுமானதாய் இருந்தது. அது என்னை இயேசு கிறிஸ்துவுக்குள் இன்னும் இறுகப் பிணைத்தது, என்னுடைய ஜீவியத்தை அவருக்குள் சுழலச் செய்தது. அது விநோதமாகத் தென்பட்டது என்பதை நான் அறிவேன், அது எப்பொழுதும் அவ்வாறே உள்ளது. 150 பவுல் தமஸ்குவிற்கு செல்லும் வழியில் இயேசுவை சந்திப்பது, ஒரு நம்ப முடியாத உண்மையாய் இருந்தது. தேவன் ஒரு பாவியினுடைய கறுப்பு இருதயத்தை மாற்றி, தம்முடைய சொந்த இரத்தத்தினால் அதை வெள்ளையாக்கும்போது, அது ஒரு நம்ப முடியாத உண்மையாய் உள்ளது. அது ஒரு நம்ப முடியாத உண்மையாய் உள்ளது. நிச்சயமாக. நீங்கள் நம்ப முடியாத உண்மையை விசுவாசிக்கிறீர்களா? அந்த நம்ப முடியாத உண்மை, அது தேவனுடைய வார்த்தையின்படி இருக்குமானால், அது உங்களுடைய முற்றிலுமானதாயிருக்க முடியும். பவுலின் மனமாற்றம் ஒரு நம்ப முடியாத உண்மையாயிருந்தது, அவனுடைய முற்றிலுமானதாக மாறியது. 151 சில காலத்திற்கு முன்பு, நான் ஒரு பழைய மருந்து கடைக்காரருடன் உட்கார்ந்து கொண்டிருந்ததை இங்கே நினைவு கூருகிறேன், நாங்கள் ஒரு சிறிய இடத்தில் பேசிக்கொண்டிருந்தோம். அவர், "சகோதரன் பிரான்ஹாம், நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்" என்றார். அவரும் ஒரு பாப்டிஸ்டாக இருந்தார். அவர், "நீங்கள் ஒரு நம்ப முடியாத உண்மையை விசுவாசிக்கிறீர்களா?" என்று கேட்டார். நான், "நிச்சயமாக. நிச்சயமாகவே விசுவாசிக்கிறேன்" என்றேன். 152 "உங்களைத் தவிர வேறு யாரிடமும் இதை நான் கூறமாட்டேன்" என்று கூறி, "ஆனால் நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்கள் என்பதை நான்-நான் அறிவேன்" என்றார். 153 அவர், "பொருளாதார மந்த நேரத்தில்," சுகவீனமானவர்களுக்கான மருந்துகளை வாங்க அந்தப் பட்டிணத்திலிருந்து ஒரு உத்தரவை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது" என்றார். மேலும், "ஒரு நாள், நான் இங்கே பின்னால் உள்ள மருந்துக் கடையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்" என்றார். மேலும், "என்னுடைய மகன் வாடிக்கையாளர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்" என்றார். மேலும், "ஒரு-ஒரு ஸ்திரீ உள்ளே வருவதை நான் கண்டேன்" என்றார். மேலும், "அவள்... அவள் உடனே தாயாகப் போகிறாள் என்பதை நீங்கள் காண முடியும்" என்றார். மேலும், "அந்தச் சிறு பெண்ணால் கிட்டத்தட்ட எழும்பி நிற்க முடியவில்லை. அவளுடைய கணவனும் பரிதாபமாக உடை உடுத்தியிருந்தான், இருவருமே. அப்பொழுது அவள் ஒரு பக்கவாட்டில் சாய்ந்து கொண்டாள். அவர் அங்குச் சென்று என் மகனைக் கேட்டபோது, அவர், 'நான் இங்கு மருத்துவரினிடமிருந்து ஒரு மருந்துச் சீட்டு வாங்கி வந்துள்ளேன்' என்றார். அவர், 'நீங்கள் எனக்காக அதைக் கொடுக்க, நான் என்னுடைய மனைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாமா?' என்று கேட்டார். 'நான் அவளை அந்த வரிசையில் நிற்க வைக்க முயற்சித்தேன். அங்கே வீதியை நோக்கிப் பாருங்கள், அவர், 'அதற்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரம் ஆகிவிடும்' என்றார். 'அவளால் இப்பொழுது நிற்க முடியாது என்பதை உங்களால் காண முடியும்" என்று கூறினாராம். 154 அப்பொழுது அந்த வாலிபன், "ஐயா, என்னால்-என்னால் அதைச் செய்ய முடியாது" என்றான். அவன், "நான் முதலில் அந்த உத்தரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறி, "ஏனெனில் என்னால்-என்னால் அதைச் செய்ய முடியாது. அது விதிகளுக்கு முரணானது" என்றான். மேலும் கூறினார்.... 155 அந்தப் பையன் என்ன கூறுகிறான் என்று பாருங்கள், அவர் அங்கே பின்னால் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்ததாக அவனுடைய தந்தை கூறினார். மேலும் அவர், "மகனே, ஒரு நிமிடம். அது என்ன?" என்று கேட்டார். 156 அவர் அங்கு நடந்து சென்றதாகக் கூறினார். அந்த வயோதிகன், ஒரு உண்மையான கிறிஸ்தவன், ஒரு உண்மையான பரிசுத்தமாக்கப்பட்ட வயோதிக மனிதன், அவர், "என்னுடைய நல்ல சகோதரனே, அது என்ன?" என்று கேட்டார். 157 மேலும் அவர், "ஐயா," என்று கூறி, அவர், "நான்...என் மனைவி, அவள் பிரசவிக்க ஆயத்தமாக இருக்கிறாள்" என்றார். அவர், 'நான்-நான்...நான் இங்குள்ள மருத்துவரிடமிருந்து உத்தரவு பெற்றுள்ளேன்; ஏதோ மருந்து, அவள் இப்பொழுதே அதை உட்கொள்ள வேண்டும்" என்றார். மேலும், "நான்-நான் அவளை அங்கே அறைக்குள் நிற்கும்படி அழைத்துச் சென்றேன்" என்றார். மேலும், "நான்-நான்...இந்த வரிசையைப் பாருங்கள்," என்று கூறி, "நான் இன்று பிற்பகல் பெற்றுக் கொள்வேனோ என்று நான் சந்தேகிக்கிறேன்" என்றார். மேலும், "நீர் எனக்காக இதைத் தர முடியுமா என்று நான் எதிர்பார்க்கிறேன்?" என்றார். மேலும், "நான்-நான் அங்கே கீழே நிற்பேன்; நான்-நான் உனக்கான பணத்தை பெற்றுக் கொள்வேன், அதற்காக மாவட்டமானது அந்த உத்தரவுக்கானதை செலுத்தும்" என்றார். 158 "ஏன்," அவர், "நிச்சயமாக ஐயா, நான் அதை உங்களுக்காக வாங்கித் தருகிறேன்" என்றார். மருந்துச் சீட்டைக் கீழே வைத்துவிட்டு, திரும்பிச் சென்றுவிட்டார். அவர் தன்னுடைய பையன் திரும்பிச் சென்று வேறு யாரோ ஒருவருக்காகக் காத்திருக்கத் துவங்கினான் என்று கூறினார். 159 மேலும், "அந்தச் சிறு பெண்மணி இரண்டு அல்லது மூன்று முறை கவனித்துப் பார்த்தாள். அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள், அவளுடைய முகத்தில் வியர்வை வழிந்தது, அவள் மிகவும் சுகவீனமாயிருந்ததை அறிந்தாள். அங்கே நின்று கொண்டிருக்கும் சகோதரன் தன்னுடைய கரங்களை அவளைச் சுற்றிப் போட்டுக் கொண்டு, உங்களுக்குத் தெரியுமா, 'தேனே, சற்று நேரம் பொறுத்துக்கொள்.' அவர், 'அந்த நல்ல மருந்துக் கடைக்காரர் நமக்கு மருந்துக் வாங்கித் தரப் போகிறார்" என்றார். 160 மேலும் அவர், "என்னால் முடிந்தளவு துரிதமாக நான் மருந்தை ஆயத்தம் செய்து, என்னுடைய மருந்தைச் சீட்டின்படி கொடுத்தேன்" என்றார். மேலும், "நான் அதை அவளுடைய கையில் கொடுக்கத் துவங்கினபோது," என்று கூறி, அவர், "சகோதரன் பிரான்ஹாம், நான் நோக்கிப் பார்த்தபோது, ஒரு ஆணி வடுக்களைக் கொண்ட கரத்தில் அதை வைத்துக்கொண்டிருந்தேன்" என்றார். அவர், "அவருடைய நெற்றியில் முட்களைக் கண்டேன்" என்றார். அவர், "நான் என் கண்களை மூடிவிட்டு, நான் திரும்பிப் பார்த்தேன்" என்றார். அவர், ""மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு,' நீங்கள் எதைச் செய்தீர்களோ, அது அவருக்கே செய்யப்பட்டது என்பதை நான் அப்பொழுதே உணர்ந்தேன்" என்றார். 161 அதற்கு அவர், "நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?" என்று கேட்டார். நான், "மருத்துவரே, நான் என்னுடைய முழு இருதயத்தோடும், அதனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறேன்" என்றேன். 162 அது என்ன? அவர், "அப்பொழுது முதற்கொண்டு கிறிஸ்து எனக்கு அதிகமாக இருந்து வருகிறார். ஏனென்றால் அந்த ஸ்திரீக்காக அதைச் செய்வது," என்று கூறி, "அது ஒரு நம்ப முடியாத உண்மையாய் இருந்தது. சாதாரண ஜனங்கள் அதை நம்பமாட்டார்கள் என்பதில் சந்தேகமேயில்லை, ஆனால்," என்று கூறி, "அதை உங்களுக்குச் சொல்லலாம் என்று நான் நினைத்தேன், ஏனென்றால் நீங்கள் அந்த அனுபவங்களை உடையவர்களாயிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்" என்றார். நான், "ஆம், ஐயா. அது உண்மை" என்றேன். 163 பரிசுத்த மார்ட்டின், அவரைக் குறித்து வாசித்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் ஒரு - ஒரு பையனாயிருந்தபோது, அவர் தேவனால் அழைக்கப்பட்டிருந்தார். அவருடைய ஜனங்கள் அஞ்ஞானிகளாயிருந்தனர். அவருடைய தகப்பனார் ஒருவிதமான, ஓ, எனக்குத் தெரியாது, ஒரு இராணுவ வீரர் என்று நான் நினைக்கிறேன், மேலும் மேலும் அவர்களுடைய பையன்கள் அவர்களைப் பின்பற்றுவது சரியானது. அவன் கூறினான்.... ஒரு நாள் அந்த நகரத்தினூடாக சென்று கொண்டிருந்தேன். அது எங்கே இருந்தது என்பதை இப்பொழுது நான் மறந்துவிட்டேன். அவர் ஒரு பிரெஞ்சுக்காரர் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர் அந்த இடைவெளியினூடாகச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்; அங்கே ஒரு வயோதிக மனிதன் மிகவும் குளிரான காலநிலையில், உறைந்து போய் மரித்துக் கொண்டிருந்தான். கடந்து சென்ற ஜனங்கள் அவருக்கு ஒன்றையும் கொடுக்கவில்லை. அவர் நின்றதாகக் கூறினார். ஜனங்கள் தங்களை விசுவாசிகளென்று முற்றிலுமாக அறிக்கையிட்டுக் கொண்டு, கடந்து செல்வார்கள், அந்த வயோதிகனை அங்கே படுத்து கிடக்க விட்டுவிட்டனர். அவன் உறைந்து போய் மரித்துக் கொண்டிருக்கிறதாகக் கூறி, தன்னைச் சுற்றிக் கொள்ள ஏதோ ஒரு காரியத்தைக் கேட்டு அவன் கெஞ்சிக் கொண்டிருந்தான். 164 பரிசுத்த மார்டின் அங்குச் சென்று, தன்னுடைய மனமாற்றத்திற்கு முன்னர், இப்பொழுது, ஒரு இராணுவ வீரனாயிருந்தபடியால், தன்னுடைய சொந்த அங்கியை எடுத்துக்கொண்டு, அதை இரண்டாக வெட்டி, அந்த நாடோடியை இந்தவிதமாக அதில் சுற்றி, மற்றொன்றை தன்னை சுற்றி போட்டுக் கொண்டாராம். ஜனங்கள் அவரைப் பார்த்து நகைத்தனர், "ஒரு வினோதமாகக் காணப்பட்ட இராணுவ வீரர், அரை அங்கியுடன் இருக்கிறார்" என்று கூறினர். பாருங்கள், அது உங்களை விசித்திரமான காரியங்களைச் செய்யச் செய்கிறது. அவருக்குள் ஏதோ ஒன்று இருந்தது, அதாவது தேவன் ஒருவர் உண்டு என்று அவர் விசுவாசித்தார். 165 அன்றிரவு, அவர் ஓய்வெடுத்து, சிறிது நேரம் உறங்கியபிறகு, எழுந்தார். யாரோ ஒருவர் அவரை எழுப்ப, அவர் நோக்கிப் பார்த்தார். அங்கே தன்னுடைய படுக்கையருகே நின்று கொண்டிருக்கையில், அங்கே இயேசுவானவர் அந்த மற்றொரு அங்கியின் துண்டினால் சுற்றிக்கொண்டு நின்றார். அதுவே பரிசுத்த மார்டினின் துவக்கமாயிருந்தது. 166 அது என்னவாயிருந்தது? தேவனுடைய வார்த்தை உண்மையானது என்ற ஒரு முழுமையை அவர் உடையவனாயிருந்தார். "மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்." சகோதரனே, நான் அந்த முற்றிலுமான நிலைக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும்... 167 இந்தக் காலையில் ஒரு பீட அழைப்பு கொடுப்பதற்குப் பதிலாக, நான் ஒரு அர்ப்பணிப்பு அழைப்பைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று நான் நினைக்கிறேன். நாம் இந்த முற்றிலுமான நிலைக்கு நம்மை அர்ப்பணிப்போமாக. வார்த்தை தேவனுடைய பரிபூரணம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் எப்பொழுதும் இருந்ததுபோலவே இன்றைக்கும் இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 168 இங்கே போதகர்கள் இருக்கிறார்க, நீங்கள் உங்களுடைய ஜீவியங்களை அர்ப்பணிக்க விரும்புகிறீர்களா? இன்றைக்கு நாம் என்ன விரும்புகிறோம்? ஒரு ஐக்கிய அட்டை அல்லது ஒரு நற்சான்றிதழ் மூலம் நமக்கு என்ன தேவை? நமக்கு இயேசு கிறிஸ்து வேண்டும். நாம் ஒரு ஐக்கிய அட்டையில் கட்டப்பட்டிருக்கவில்லை, நாம் தேவனுடைய வார்த்தையோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம், "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 169 நாம் இப்பொழுது நம்முடைய காலூன்றி எழுந்து, நம்முடைய ஜீவியங்களை அர்ப்பணிப்போமாக. எனக்கும் கூட வேண்டும். நான் என்னையே புதிதாகக் கட்டிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய முடிச்சு கட்டப்பட்டுள்ளதை, நான் சரிபார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் என்னுடைய முற்றிலுமானதை சரிபார்த்துக் கொண்டிருக்கிறேன். "கர்த்தாவே, உம்முடைய வார்த்தையல்லாமல் வேறேதாவது எனக்குள்ளாக இருந்தால், அதை எடுத்துப்போடும். நான் உம்மைத் தவிர வேறெதையும் அறியேன். நான் உம்மைத் தவிர வேறெதையும் அறிய விரும்பவில்லை." இப்பொழுது, ஒவ்வொருவரும் உங்களுடைய சொந்த வழியில். 170 நான் இந்த வாரம் முழுவதும் உங்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் உங்களுக்குச் சத்தியத்தை கூறியிருக்கிறேன். தேவன் சத்தியத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர் அதை மீண்டும் மீண்டும் செய்திருக்கிறார். முற்றிலுமான நிலை என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது உங்களுக்கும் எனக்கும், ஸ்திரீகளாகிய நீங்கள் எல்லோரையும், ஆண்களாகிய நீங்கள் எல்லோரையும், பையன்களாகவும், பெண்களாகவும், நீங்கள் யாராயிருந்தாலும், எல்லா பாடகர் குழுவையும், இங்குள்ள எல்லா-எல்லா ஜனங்களாகிய நீங்கள் எல்லோரும், எங்கும், கீழே அடித்தளத்தில், மேல்மாடியில், சுவர்களைச் சுற்றி, பின்பகுதியில்; நாம் எங்கிருந்தாலும், நம்முடைய முற்றிலுமான இயேசுவை நாம் எடுத்துக் கொள்வோம், ஏனென்றால் நாம் மரண நிழலின் பள்ளத்தாக்குகளுக்கு வந்தாக வேண்டும். நான் அவரைத் தவிர வேறொன்றையும் அறியேன். அவர் என்னுடைய முற்றிலுமானவர், ஏனென்றால் அவர் என்னுடைய ஜீவியத்தில் எழுப்பப்பட்டிருக்கிறார், அவர் உண்மையானவர் என்பதை நான் அறிவேன். 171 நாம் இப்பொழுது நம்முடைய கரங்களை உயர்த்தி ஜெபிப்போமாக. நாம் நம்முடைய அர்ப்பணிப்பு ஆராதனையை செய்வோம். 172 கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய வார்த்தை பண்டைய காலத்திலிருந்தே வருகிறது, அதுவே துவக்கமும் முடிவுமாயுள்ளது. நான் இப்பொழுது, இந்தச் சபையோருடன், இன்றைக்கு, இந்தப் பிரசங்க பீடத்தின் மேல், என்னைப் புதிதாக அர்ப்பணிக்கிறேன். நான் இந்தச் சபையை, ஜீவ கூடாரத்தை ஒரு அர்ப்பணிப்பிற்காகக் கேட்கிறேன். எல்லா வேறுபாடுகளையும் தீர்த்து, அவை யாவும் போய்விட, கடந்தகாலங்கள் கடந்துபோகட்டும். சுவிசேஷ ஊழியக்காரர்கள், ஏதோ காரியம் சம்பவிக்கும் என்று எண்ணி... கவலை கொண்டுள்ளனர். ஓ தேவனே, நாங்கள் இந்தக் காலையில் வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவோடு எங்களை இணைத்துக் கொள்கிறோம்; கிறிஸ்துவையும், சிலுவையில் அறையப்பட்ட அவரையும் தவிர வேறெதையும் அறியாதிருக்க தீர்மானித்துள்ளோம். ஓ வடநட்சத்திரமே, ஓ பரிசுத்த ஆவியே, ஓ தேவனுடைய திசைகாட்டியே, இப்பொழுது ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும் வாரும். நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினூடாக எங்களையே உமக்கு அர்ப்பணிக்கிறோம். தேவனுக்கு மகிமை! ஆமென். சரி, சகோதரனே. 12 AN ABSOLUTE ஒரு முற்றிலுமானது 13